டுகோபார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டுகோபார் (Doukhobors) மக்கள் உருசியாவைத் தோற்றமாகக் கொண்ட ஒரு ஆன்மிக இனக்குழு மக்கள். இவர்கள் ஆன்ம பலத்தையே முக்கியமாய்க் கருதுகின்றனர். தேவாலய வழிபாட்டு முறைகள், விவிலியம், இயேசுவின் இறைத்தன்மை ஆகிய அனைத்தையும் நிராகரித்தவர்கள். அஹிம்சை, சைவ உணவு முறை, உடல் உழைப்பு ஆகியவற்றை தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள்.

தங்கள் வாழ்க்கை முறையை அரசாங்கம் இடையூறு செய்யக் கூடாது என வலியுறுத்திய இவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருசியப் பேரரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். வெளியேற்றப்பட்ட இவர்களை கனடா ஏற்றுக் கொண்டது. இன்று தோராயமாக கனடாவில் 40,000 டுகோபார் மக்கள் வாழ்கின்றனர்;.


டுகோபார் மக்களின் வாழ்க்கை முறையும் உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களின் சித்தாந்தங்களும் ஒத்துப் போயின. டுகோபார் மக்களின் வாழ்க்கை முறையால் கவரப்பட்ட டால்ஸ்டாய் அவர்களுக்காக பரிந்து பேசினார். அவர்கள் உருசியாவிலிருந்து கனடாவுக்கான கடற்பயணத்திற்காக உயிர்த்தெழுதல் எனும் நாவலை எழுதத் துவங்கினார். இது மூலமும் தனது நண்பர்கள் மற்றும் மூலமும் மொத்தம் 30,000 ரூபிள் சேகரித்தளித்தார். இது அவர்களின் பயணத்தின் பாதிச்செலவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுகோபார்&oldid=1363648" இருந்து மீள்விக்கப்பட்டது