டி. ரங்காச்சாரி
Appearance
டி. ரங்காச்சாரி (T. Rangachari) (1865–1945) இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, ஊடகவியலாளர், இந்திய மத்தியச் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார்.
இளமை வாழ்க்கை
[தொகு]ரங்காச்சாரி, சென்னை மாகாணத்தில் அய்யங்கார் நிலக்கிழார் குடும்பத்தில் 1865ல் பிறந்தவர்.[1]
இவர் சட்டப் படிப்பை சென்னையில் முடித்தவர்.[1]
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் வெற்றிகரமான வழக்கறிஞாரக இருந்தவர். 1927-28ல் ரங்காச்சாரி தலைமையில் திரைப்பட தணிக்கைக் குழு நிறுவப்பட்டது.[2]
அரசியல்
[தொகு]சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக பணியாற்றியவர்.
சென்னை மாகாணச் சட்டமன்றம் மற்றும் இந்திய மத்தியச் சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பின்னர் அதன் துணை அவைத் தலைவராகவும் இருந்தவர்.
மறைவு
[தொகு]ரங்காச்சாரி 1945ல் தமது எண்பதாவது அகவையில் மறைந்தார்.
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 The who's who in Madras: A pictorial who's who of distinguished personages, princes, zemindars and noblemen in the Madras Presidency, Issue 9. Pearl Press. 1940. p. 205.
- ↑ Vinayak Purohit. Arts of transitional India twentieth century. Vol. 1.
மேற்கோள்கள்
[தொகு]- Some Madras Leaders. 1922. pp. 35–37.