டி. என். பிரதாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. என். பிரதாபன்

டி. என். பிரதாபன் (T. N. Prathapan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1960 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று தளிக்குளத்தில் தொடுங்கல் நாராயணன் மற்றும் காளிக்குட்டி தம்பதியருக்கு இவர் மகனாகப் பிறந்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். தற்போது திருச்சூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். 2011 ஆம் ஆண்டில் கேரள சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கொடுங்கல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1] முன்னதாக இவர் 2001 ஆம் ஆண்டு மற்றும் 2006 ஆம் ஆன்டுகளிலும் நாட்டிகை சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கேரள சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார்.

டி. என். பிரதாபன் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கேரளாவிலிருந்து திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசி பிரதிநிதியாக நாட்டளுமன்றத்தில் பணியாற்றிவருகிறார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "T.N. Prathapan wins at Kodungallur for 9432 votes". Reporter TV. 13 May 2011. Archived from the original on 30 August 2011. பார்க்கப்பட்ட நாள் 11 April 2012.
  2. "Thrissur Election Result 2019: TN Prathapan of INC wins against BJP's Suresh Gopi". The Times of India. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Thrissur Lok Sabha Election Results 2019 Kerala: Congress's TN Prathapan wins; BJP's Suresh Gopi puts on strong show". DNA India. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  4. "Thrissur Lok Sabha Election Result 2019 LIVE Updates: TN Prathapan of Congress wins". 24 May 2019. https://www.firstpost.com/politics/thrissur-lok-sabha-election-result-2019-live-updates-tn-prathapan-of-congress-wins-6650401.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._பிரதாபன்&oldid=3814480" இலிருந்து மீள்விக்கப்பட்டது