டிரையும்பீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிரையும்பீன் (Triumphene) என்பது புளோரினேற்றமும் பீனைலேற்றமும் செய்யப்பட்ட புல்லரீன் வழிப்பெறுதி சேர்மமாகும்[1][2]. அறை வெப்பநிலையில் பென்சீன்- பெரிக் குளோரைடு (FeCl3) கரைசலில் C60F18 சேர்மத்தை இரண்டு வாரங்களுக்கு வினைபுரியச் செய்து டிரையும்பீன் தயாரிக்கபடுகிறது. போல்டாலினா, சிடிரீட் மற்றும் டெய்லர் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு இதை மேற்கண்ட முறையில் தயாரித்தனர். இச்சேர்மமே முதலாவது மூவிதழ்தகடு வடிவ பீனைலேற்ற[60]புலரின் ஆகும். சாத்தியமான திறனுள்ள பயன்பாட்டிற்கு ஒரு தனித்தன்மையான சாரத்தை வழங்கி உதவும் மீநுண்ணளவு படமாக்கும் முகவராக டிரையும்பீன் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. O. V. Boltalina; R. Taylor; J. M. Street (1998). "Formation of triumphene, C60F15Ph3: first member of a new trefoil-shaped class of phenylated [60]fullerenes". Chem. Commun. (17): 1827–1828. doi:10.1039/a805340e. 
  2. A. D. Darwish, A. G. Avent, A. K. Abdul-Sada, I. V. Goldt, P. B. Hitchcock, I. V. Kuvytchko, R. Taylor, (2004). "Electrophilic Aromatic Substitution by the Fluorofullerene C60F18". Chemistry: A European Journal 10 (18): 4523–4531. doi:10.1002/chem.200400036. பப்மெட்:15378631. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரையும்பீன்&oldid=2783373" இருந்து மீள்விக்கப்பட்டது