டிரம்ப் கோபுரம்

ஆள்கூறுகள்: 40°45′45″N 73°58′26″W / 40.7625°N 73.9738°W / 40.7625; -73.9738
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரம்ப் கோபுரம்
ஐந்தாம் அவெனியூவில் இருந்து தோற்றம்
டிரம்ப் கோபுரம் is located in Manhattan
டிரம்ப் கோபுரம்
Manhattan இல் அமைவிடம்
டிரம்ப் கோபுரம் is located in New York City
டிரம்ப் கோபுரம்
டிரம்ப் கோபுரம் (New York City)
டிரம்ப் கோபுரம் is located in New York
டிரம்ப் கோபுரம்
டிரம்ப் கோபுரம் (New York)
டிரம்ப் கோபுரம் is located in the United States
டிரம்ப் கோபுரம்
டிரம்ப் கோபுரம் (the United States)
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவுற்றது
வகைசில்லறை வணிகம், அலுவலகம், குடியிருப்பு
இடம்721 ஐந்தாம் அவெனியூ
நியூயார்க் நகரம், நியூயார்க் 10022
ஐக்கிய அமெரிக்கா
ஆள்கூற்று40°45′45″N 73°58′26″W / 40.7625°N 73.9738°W / 40.7625; -73.9738
கட்டுமான ஆரம்பம்1979
நிறைவுற்றது1983
திறப்புநவம்பர் 30, 1983; 39 ஆண்டுகள் முன்னர் (1983-11-30)
உரிமையாளர்டொனால்ட் டிரம்ப், தி டிரம்ப் ஆர்கனைசேசன்
மேலாண்மைதி டிரம்ப் ஆர்கனைசேசன்
உயரம்
கட்டிடக்கலை664 அடி (202 m)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை58 உண்மையான தளங்கள்; உச்சத் தளம் 68 என எண்ணிடப்பட்டுள்ளது[2]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)டேர் இசுக்கட்; பூர், சுவாங்கே, ஹேடன் & கோனெல்
மேம்பாட்டாளர்டொனால்ட் டிரம்ப்
அமைப்புப் பொறியாளர்இர்வின் கான்டர்

டிரம்ப் கோபுரம் (Trump Tower) என்பது, 58 தளங்களைக் கொண்டதும், 664 அடிகள் உயரமானதுமான ஒரு கலப்புப் பயன்பாட்டு வானளாவி ஆகும். இது, நியூயார்க் நகரத்தின் மிட்டவுன் மான்ஹட்டனில், 721-725 ஐந்தாம் அவெனியூவில், 56 ஆம் 57 ஆம் வீதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. டிரம்ப் கோபுரம், "தி டிரம்ப் ஆர்கனைசேசன்" என்னும் நிறுவனத்தின் தலைமையிடமாகச் செயற்படுகிறது. அத்துடன், இக்கோபுரம் உருவாக்கப்பட்டபோது, அதன் உடமையாளரும், வணிகரும், நிலஞ்சார் சொத்து மேம்பாட்டாளருமான, ஐக்கிய அமெரிக்க சனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூட்டுரிமைக் கட்டிட உச்சி வீடும் இக்கட்டிடத்தில் உள்ளது. டிரம்ப் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இக்கட்டிடத்தில் வசிக்கின்றனர் அல்லது முன்னர் வசித்துள்ளனர். "பொன்விட் டெல்லர்" என்னும் பல்பொருள் அங்காடி நிறுவனத்தின் சிறப்பு அங்காடி ஒன்று முன்னர் இருந்த நிலத்திலேயே இக்கோபுரம் அமைக்கப்பட்டது.

பூர், சுவாங்கே, ஹேடன் அன்ட் கோனெல் நிறுவனத்தைச் சேர்ந்த டேர் இசுக்கட் (Der Scutt) என்பவர் இதை வடிவமைத்தார். டிரம்பும், "ஈகுயிட்டபிள் இன்சூரன்சு கம்பனி"யும் இக்கட்டிடத்தைக் கட்டுவித்தனர். இக்கட்டிடம் மிட்டவுன் மான்ஹட்டனின் சிறப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தபோதும், ஒரு கலப்புப் பயன்பாட்டு வளர்ச்சி என்ற வகையிலேயே இக்கட்டிடத்துக்கு அநுமதி கிடைத்தது. இக்கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டு இருந்தபோது பல சர்ச்சைகள் ஏற்பட்டன. பொன்விட் டெல்லர் அங்காடியில் இருந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சிலைகள் அழிக்கப்பட்டமை, டிரம்ப் கட்டுமான ஒப்பந்தகாரருக்குக் குறைவாகப் பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு, கட்டிடத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததால் டிரம்ப் வழக்கு வைத்தமை என்பன இவற்றுள் அடங்கும்.

இக்கட்டிடத்தின் கட்டுமானம் 1979 ஆம் ஆண்டு தொடங்கியது. கீழ்த்தளம், குடியிருப்புப் பகுதி, அலுவலகப் பகுதி, அங்காடிகள் என்பன, 1983 பெப்ரவரிக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெவ்வேறு நாட்களில் திரந்துவைக்கப்பட்டன. தொடக்கத்தில், வணிக, சில்லறை வணிகப் பகுதிகளைக் குறைவானோரே வாடகைக்கு எடுத்திருந்தன. குடியேற்ற அலகுகள், கட்டிடம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே விற்றுத் தீர்ந்துவிட்டன. டிரம்பின் 2016 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் பிரசாரத் தலைமை அலுவலகம் இக்கட்டிடத்திலேயே அமைந்ததால், 2016க்குப் பின்னர் இக்கட்டிடத்துக்கு மக்கள் வருகை பெருமளவு அதிகரித்தது. டிரம்பின் 2020 ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசாரத் தலைமையகமும் இங்கேயே அமைந்துள்ளது.

உருவாக்கம்[தொகு]

நியூயார்க் நகரத்தின் முன்னணி நிலஞ்சார் சொத்து மேம்பாட்டாளரான டொனால்ட் டிரம்ப், சிறு வயதிலிருந்தே 56 ஆம் தெரு, ஐந்தாம் அவெனியூவில் உயர்ந்த கட்டிடம் ஒன்றைக் கட்டவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், 1970களின் நடுப்பகுதியில் அவரது வயதின் முப்பதுகளில் இருந்தபோது இதற்கான திட்டத்தை உருவாக்கத் தொடங்கினார். அக்காலத்தில் அந்த இடத்தில் 1929 இல் கட்டப்பட்டுக் கட்டிடக்கலை அடிப்படையில், பெயர் பெற்றிருந்த "பொன்விட் டெல்லர் அங்காடி" அமைந்திருந்தது.[3] இவ்விடமே நகரின் மிகச் சிறந்த அமைவிடம் என டிரம்ப் கருதியிருந்தார்.[4] ஏறத்தாழ ஒவ்வோராண்டும் இரண்டு தடவைகள் "பொன்விட் டெல்லர்" அங்காடியின் தாய் நிறுவனமான "ஜெனெஸ்கோ"வைத் தொடர்புகொண்டு குறித்த அங்காடியை விற்க விருப்பமா எனக் கேட்டுக்கொண்டு இருந்தார். முதல் தடவை தொடர்பு கொண்டபோது அவர்கள் சிரித்ததாக டிரம்ப் கூறினார். "ஜெனெஸ்கோ" டிரம்பின் கோரிக்கைக்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்தனர். அவர்கள் டிரம்ப் விளையாடுவதாக எண்ணினர்.

1977 இல் யோன் அனிகன் கெனெஸ்கோவின் புதிய தலைவர் ஆனார்.[5] அவர் கடன்களைத் தீர்ப்பதற்காகச் சில சொத்துக்களை விற்க எண்ணினார். டிரம்ப் ஐந்தாம் அவெனியூ அங்காடியை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். 1979 இல் டிரம்ப் நிறுவனம் அந்த அங்காடியை வாங்கியது.[6] அப்போது அந்த நிலம் "இகுயிடபிள் லைப் அசூரன்ஸ் சொசைட்டி ஆஃப் யுனைட்டட் ஸ்டேட்ஸ்" என்னும் காப்புறுதி நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்தது.[7] ஜெனெஸ்கோ அந்த இடத்தை நீண்டகாலக் குத்தகைக்கு எடுத்திருந்தது. அக்குத்தகையில் 29 ஆண்டுகளே எஞ்சி இருந்தது. அந்த இடத்தில் கட்டிடம் கட்டினால் 2008 ஆம் ஆண்டு அது மீண்டும் காப்புறுதி நிறுவனத்தின் கைக்குப் போய்விடும்.[8][9] நிலத்தை விற்பதற்கு மறுத்த காப்புறுதி நிறுவனம், கட்டுமானத்தில் 50% உரிமையைப் பெற்றுக்கொண்டு நிலத்தை அத்திட்டத்துக்கு வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Trump Tower". The Skyscraper Center (Council on Tall Buildings and Urban Habitat) இம் மூலத்தில் இருந்து February 2, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202200631/http://skyscrapercenter.com/building/trump-tower/1611. பார்த்த நாள்: January 29, 2017. 
  2. Cheshes, Jay (November 30, 2001). "New York Metro Short List: Trump's Edifice Complex". New York இம் மூலத்தில் இருந்து June 24, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160624201201/http://nymag.com/news/articles/shortlist/trump/. பார்த்த நாள்: August 11, 2016. 
  3. Gray, Christopher (October 3, 2014). "The Store That Slipped Through the Cracks". The New York Times இம் மூலத்தில் இருந்து September 7, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150907210338/http://www.nytimes.com/2014/10/05/realestate/fifth-avenue-bonwit-teller-opulence-lost.html. பார்த்த நாள்: August 22, 2015. 
  4. "A Builder Who Trumps His Peers". February 9, 1987. http://articles.chicagotribune.com/1987-02-09/features/8701100872_1_donald-trump-trump-parc-trump-tower. 
  5. "New Genesco Chief Aims to Consolidate Divisions". May 3, 1977. https://www.nytimes.com/1977/05/03/archives/new-genesco-chief-aims-to-consolidate-divisions.html. 
  6. Barmash, Isadore (February 6, 1979). "45 Genesco Shops to Go To Allied". https://www.nytimes.com/1979/02/06/archives/45-genesco-shops-to-go-to-allied-bonwits-erratic-record-allied.html. 
  7. Barmash, Isadore (February 6, 1979). "45 Genesco Shops to Go To allied". https://www.nytimes.com/1979/02/06/archives/45-genesco-shops-to-go-to-allied-bonwits-erratic-record-allied.html. 
  8. Tuccille 1985, ப. 150.
  9. Rubin & Mandell 1984, ப. 22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரம்ப்_கோபுரம்&oldid=3587109" இருந்து மீள்விக்கப்பட்டது