டிமோனா தொலைக்கண்டுணர்வி வசதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிமோனா தொலைக்கண்டுணர்வி வசதி (Dimona Radar Facility) என்பது இசுரேலிலுள்ள டிமோனா எனுமிடத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இரு 400 மீட்டர் (1,300 அடி) உயரமுடைய தொலைக்கண்டுணர்வி கோபுரங்கள் ஆகும். இது நெடுவீச்சு ஏவுகணைகளை வானவெளியில் ஊடாக அதன் தடம் தொடர்ந்து, தரையில் நிலைகொண்ட ஏவுகணைகளுக்கு தேவையான இலக்கின் தரவினைக் கொடுத்து அவற்றை இடைமறிக்க வடிவமைக்கப்பட்டது.[1] எக்ஸ்-பட்டை தொலைக்கண்டுணர்வி பாவிப்பதால், இது 1,500 மைல் / 2,400 கிலோமீட்டர் தொலைவில் வைத்து ஏவுகணைகளைக் கண்டறிய முடியும்.[2] இந்தக் கோபுரம் அமெரிக்க இராணுவத்தினால் சொந்தமாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அதேவேளை பயன்படுத்திய உளவுத் தகவல்கள் இசுரேலுக்கு வழங்கப்படும்.[1][2]

இக்கோபுரங்களின் வசதி 30°58′07″N 35°05′50″E / 30.9685905°N 35.097121°E / 30.9685905; 35.097121 (Dimona Radar Tower) மற்றும் 30°58′32″N 35°05′55″E / 30.9756831°N 35.0986823°E / 30.9756831; 35.0986823 (Dimona Radar Tower) ஆகிய அச்சுகளில் அமைந்து, இசுரேலிலுள்ள உயரமான கோபுரங்களாகவும், உலகிலுள்ள உயரமான தொலைக்கண்டுணர்வி கோபுரமாகவும் இருக்கின்றது[3]

உசாத்துணை[தொகு]