டால்மேசன் (நாய்)
டால்மேசன் | |||||||||||||||||||||||||
தோன்றிய நாடு | குரோவாசியா | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்) |
இடால்மேசன் (Dalmatian) என்பது ஒரு வகை நாய் ஆகும். இதன் பூர்வீகம் குரோவாசியா ஆகும்.[1] இதன் உடலில் திட்டு திட்டாக காணப்படும் கறுப்பு வெள்ளைப் புள்ளிகள் இதன் சிறப்பு அம்சமாகும். பண்டைக் காலத்தில் சுமை இழுக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் இது குடும்பத்தினரோடு பழகுவதற்கு சிறந்த நாய் என கருதப்படுகிறது.
உடல்
[தொகு]இது நடுத்தரமான உடல்வாகு கொண்டது. இதன் எடை 16 கிலோகிராம் முதல் 32 கிலோகிராம் வரை இருக்கும்.இதன் உயரம் சுமார் 48 முதல் 61 செண்ட்டி மீட்டர் ஆகும். ஆண் நாயானது பெண் நாயை விட சற்று பெரியதாக இருக்கும்.[2] இதன் கால் நகங்கள் வெள்ளையாக இருக்கும்.இதன் கண்கள் நீலம் அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும். சில நாய்களுக்கு ஒரு கண் நீலமாகவும் மற்றொரு கண் பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.[3]
பயன்கள்
[தொகு]இது சிலசமயங்களில் மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.மேலும் பாதுகாவலாகவும் , விளையாட்டுப் பயிற்சித் துணையாகவும் , தீயணைப்புப் பிரிவிலும் பயன்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Croatian Kennel Club". Hks.hr. 30 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-05-22.
- ↑ "American Kennel Club – Dalmatian". Akc.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-26.
- ↑ Thornton, Kim Campbell. "THE DALMATIAN." Dog World 89.11 (2004): 24.