டால்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டால்க் கட்டியின் படம்
டால்க்

டால்க் (Talc) என்பது மக்னீசியமும் சிலிக்கானும் சேர்ந்துள்ள ஒரு மென்மையான (மெதுமையான) கனிமம். பார்ப்பதற்கு வெண்மையாக இருக்கும். வேதியியலில் இதனை நீர்சேர்ம மக்னீசிய சிலிக்கேட்டு என்று கூறுவர். இதன் வேதியியல் வாய்பாட்டை இரண்டு விதமாக எழுதலாம்.:H2Mg3(SiO3)4 அல்லது Mg3Si4O10(OH)2.

ஒப்பனைக்காக மக்கள் தங்கள் முகத்துக்கோ வேறு உறுப்புகளுக்கோ டால்க்கின் பொடியை பூசிக்கொள்வர். இது "டால்க்கம் பவுடர்" என்று வழங்குகின்றது. டால்க்கின் முதன்மையான பயன்பாடு வெள்ளைத் தாள்கள் (காகிதம்) செய்வதிலாகும். இது தவிர நெகிழிகள், சுட்டாங்கல் (செராமிக்), மின்கடத்தாப்பொருளாகிய போர்சலீன் (ஸ்டெயாட்டைட்) போன்ற பொருள்களிலும் பயன்படுகின்றது.[1] டால்க் என்னும் சொல் அரபு மொழி அல்லது பாரசீக மொழியில் உள்ள talq என்னும் சொல்லில் இருந்து ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வழங்குகின்றது. இது மிக மிக மென்மையான பொருளாதலால், மோ கெட்டிமை எண் அளவீட்டில் 1 முதல் 10 வரை உள்ள அளவுக் கூறுகளில் இதன் மோ எண் 1 ஆகும். (யாவற்றினும் கெட்டியான வைரம் 10 ஆகும்). டால்க்கின் ஒப்படர்த்தி 2.5–2.8 ஆகும்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. Kirk-Othmer Chemical Encylopedia, John Wiley & Sons Inc.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்க்&oldid=2741118" இலிருந்து மீள்விக்கப்பட்டது