டாலியா எர்னாண்டசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாலியா எர்னாண்டசு ஆர்மெண்டா ( Dalia Hernández Armenta : பிறப்பு ஆகஸ்ட் 14,1985) மெக்சிக்கோவைச் சேர்ந்த ஓர் நடிகையாவார்.[1] இவர் அபோகாலிப்டோ (2006) தி லெஜண்ட் ஆஃப் தி மாஸ்க் (2014) மற்றும் மிராகில் அண்டர்கிரவுண்ட் (2016) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.[2]

2007 ஆம் ஆண்டில், அபோகாலிப்டோ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான இமாஜன் விருதை வென்றார்.[3] இது இலத்தீன் சமூகத்தால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்து விளங்குகின்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. கபடோசியா டெல் 2008 என்ற தொலைக்காட்சித் தொடரில் "மரியா மக்தலேனா" என்கிற "ரோசா" என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 2014 ஆம் ஆண்டில் தி லெஜண்ட் ஆஃப் தி மாஸ்க் படத்தில் “நயேலி” என்ற கதாபாத்திரத்திலும், மிராகில் அண்டர்கிரவுண்ட் திரைப்படத்தில் பாட்ரிசியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dalia Hernandez". CINeol (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
  2. "Best Movies of 2006". Lassen County Times. 16 January 2007. https://news.google.com/newspapers?nid=2185&dat=20070116&id=MGMlAAAAIBAJ&sjid=QRUGAAAAIBAJ&pg=1465,4060092&hl=en. 
  3. "'Ugly Betty' Wins at 22nd Imagen Awards". AP Online. 29 July 2007 இம் மூலத்தில் இருந்து 20 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160220222102/https://www.highbeam.com/doc/1Y1-108848606.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாலியா_எர்னாண்டசு&oldid=3914050" இலிருந்து மீள்விக்கப்பட்டது