டாரன்டூலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாரன்டூலா சிலந்தி

பொதுவாக விலங்குகளிடம் ஆறறிவு இல்லை.உள்ளுணர்வு(Instinct) தான் அவற்றை பல வழிகளில் செயல்படச் செய்கின்றது.ஆனால் டாரன்டூலா சிலந்திக்கு உள்ளுணர்வா (அ)பகுத்தறிவா என்ற ஐயம் தோன்றுகிறது.விலங்குகள் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் (அ) தப்பித்துக்கொள்ளும்.ஆனால் இவை எதிர்பதற்கு எல்லா வசதிகளையும் பெற்றிருந்தும்,எதிரியின் கையில் தன்னை அறியாமலேயே அழிந்துவிடுகிறது.

பண்புகள்[தொகு]

டாரன்டூலா வகை சிலந்திகள் வெப்பப்பிரதேச(tropics) நாடுகளில் வாழ்பவை.சில இனங்கள் பெரியவை.இவை தாக்கும் போது ஆழமான புண்களை உருவாக்கும்.மனிதனை தாக்குவதில்லை,சற்று வலி மட்டுமே உருவாகும்.எலிகள்,பூச்சிகள்களை இவை தாக்கி அழிக்கின்றது.இவை பொந்துகளில் வாழும்,மாலையில் மட்டுமே வெளிவரும்.இரவில் பெண் துணையைத் தேடி வெளியே சுற்றும்.ஆண்,பெண் சிலந்திகள் இணைந்த பிறகு ,ஆண் சிலந்தி சில வாரங்களில் இறந்துவிடும்.ஆனால் பெண் டாரன்டூலா சிலந்தி 25ஆண்டுகள் கூட உயிர் வாழும்.

சிறப்பியல்புகள்[தொகு]

  • பெண் டாரன்டூலா சிலந்தி ஒரே சமயத்தில் 200-400முட்டைகள் இடும்.முட்டைகளைச் சுற்றிப் பட்டுப் போன்ற கூட்டை அமைத்து விட்டு சென்று விடும்.முட்டைப் பொரித்த பின் வரும் இளம் சிலந்தி தனக்கு சாதகமான இடம் தேடிச் சென்று விடும்.
  • இவை பூச்சிகளையும்,நில அட்டைகளையும் உணவாக உட்கொள்கின்றன.இவை ஒரு முறை உணவு உட்கொண்டால்,அவை செரிக்கும் வரை உணவு உட்கொள்வதில்லை.
  • இவற்றால் அசைகின்ற பொருளை மட்டுமே பார்க்க இயலும்.ஒளியின் தன்மையில் ஏற்படும் மாறுபாட்டை மட்டுமே உணரமுடியும்.இதன் பார்வைத்திறன் மிகக் குறைவு.
  • ஒளியைக் கேட்கும் திறன் மிகக் குறைவு.தொடுணர்வு மிக துல்லியமாக இருக்கும்.
டாரன்டூலா சிலந்தி

தொடு உணர்வை இவை 1.தனது உடலின் மீது ஏதாவது ஒரு பொருள் அழுத்தும் போதும்,2.உரோமங்களின் மீது ஏதாவது பொருள் படும்போதும்,3.இவற்றின் கால்களின் மீதுள்ள ட்ரைகோபோத்ரியா(Trichobothria) என்ற நுண்ணிய உரோமங்களில் ஏதாவது பொருள் பட்டால் இது நகர்த்திக் கொள்ளும்.மாறாக இவை அதை தாக்குவதில்லை.[தொகு]

தற்காப்பு பணி[தொகு]

டாரன்டூலா சிலந்தி உணவு தேடல்

உடலின் மீது ஏதாவது ஒரு பொருள் தீண்டினால் மட்டுமே ,தன் முன் கால்களை உயர்த்தி கொடுக்குகளைக் கொண்டு தயாராகும்.ஆனால்,எதிரே உள்ள பொருள் அசைவை நிறுத்தி விட்டால் தனது பழைய நிலைக்கேச் சென்று பின்னர் நகர்ந்து விடும்.இவற்றின் கால்களின் மீது வளர்ந்துள்ள நுண்ணிய உரோமங்கள் காற்றின் வளியே வரும் அசைவை உணரும் திறன் கொண்டது.இச்சிலந்தியின் மீது காற்றை ஊதினால்,தனது முன்புற கால்களைத் தூக்கிக் கொண்டு குதித்து விழும்.இவ்வசைவு தீங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உதவுகிறது.எதிரிகளிடமிருந்து விலகி சென்றுவிடுமே தவிர,எதிரிகளைத் தாக்க முயற்சிப்பதில்லை.

உணவைப் பற்றும் முறை[தொகு]

இச்சிலந்தியின் உடல் முழுவதும் உரோமங்கள் உள்ளது.முக்கியமாக,கால்களின் மீது அதிகமான உரோமங்கள் உள்ளன.அதன்மீது ஏதேனும் பொருள் பட்டுவிட்டால்,அதனை மிக விரைவாகப் பிடித்துக் கொள்ளும்.ஆனால்,பசி இல்லாத போது பொருட்கள் தன் மீது பட்டாலும் அதனை விட்டு விலகிச் செல்கின்றது.

"பெப்சிஸ்"இனக் குளவிகளளுக்கு இவை சிறந்த வகை உணவாக இச்சிலந்தி உள்ளது..

[1][2]

  1. உயிரியலில் சில உண்மைகள்:இராம.இலக்குமி நாராயணன்,சேகர் பதிப்பகம்.
  2. https://commons.m.wikimedia.org/w/index.php?search=Tarentula+&title=Special:Search&profile=default&fulltext=1&searchToken=8vi5lhn13pirpvsap0c1kp0gk
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாரன்டூலா&oldid=2379441" இருந்து மீள்விக்கப்பட்டது