உள்ளடக்கத்துக்குச் செல்

டாக் அடம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


டாக் அடம்ஸ்
களத்தில் New York Knickerbockers பேஸ்பால் அணியின் ஏழு உறுப்பினர்கள். அவர்களின் உடை வெள்ளைச்சட்டையும் கறுத்த காற்சட்டையும்.
அடம்ஸ் 1859 ம் ஆண்டு New York Knickerbockers குழுவில் நடுவில் நிற்கின்றார்
பிறப்புடானியல் லுசிஸ் அடம்ஸ்
(1814-11-01)நவம்பர் 1, 1814
Mont Vernon, New Hampshire
இறப்புசனவரி 3, 1899(1899-01-03) (அகவை 84)
New Haven, Connecticut
பணிPlayer and executive for New York Knickerbockers
Leader of National Association of Base Ball Players rules and regulations committee
அறியப்படுவதுHelped institute rules changes in baseball
Credited as creator of shortstop position

டானியல் லுசிஸ் "டாக்" அடம்ஸ் (கார்த்திகை 1, 1814 – தை 3, 1899) அமெரிக்காவின் அடிப்பந்தாட்டம் விளையாட்டு வீரராகவும் நிருவகியாகவும் இருந்தார், அவர் வரலாற்றாசிரியர்களால் முந்திய வருட விளையாட்டுத்துறையில் முக்கியமன ஒரு நபராக கருதப்பட்டார். அவர் நீண்ட காலமாக New York Knickerbockers இல் உறுப்பினராகவும் இருந்தார். அவர் தனது முதலாவது ஆட்டத்தினை New York அடிப்பந்தாட்டம் கழகத்திற்காக 1840 ம் ஆண்டு விளையாடியதுடன் ஐந்து வருடங்கள் கழித்து New York Knickerbockers இல் இணைந்து கொண்டார். அவர் அவருடைய நாற்பதுகள் வரை தொடர்ச்சியாக அடிப்பந்தாட்டம் கழகத்திற்காக விளையாடினார் அதனுடன் உள்ளக பஜிற்சிப்போட்டிகளிலும் எதிரணிகள் உடனான போட்டிகளிலும் பங்கெடுத்திருந்தார். ஆராய்ச்சியாளர்கள் அடம்ஸ் இனை குறுகிய நிறுத்தம் (shortstop) எனப்படும் களத்தடுப்பளர்களின் குறும் எறிகளில் இருந்து பாதுகாக்கும் நிலையினை உருவாக்கியவர் என அழைக்கின்றனர். அடம்ஸ் தனது விளையாட்டு தொழிலுக்கு மேலதிகமாக அடிப்பந்தாட்டம் மட்டை உருவாக்கத்திலும் ஈடுபட்டார். அவர் சில சந்தர்பங்களில் நடுவராகவும் செயற்பட்டார்.

1847 தொடக்கம் 1861 வரையான காலப்பகுதிக்குள் Knickerbockers அடம்ஸ் இனை தமது தலைவராக ஆறு தடவைகள் தேர்ந்தெடுத்தனர், அதனுடன் ஆறு வருடங்கள் ஆறு வருடங்கள் உப தலைவர், பொருளாளர், மற்றும் இயக்குநர் பதவிகளையும் வகித்தார். அவர் தலைவராக இருத்த பொழுது அடிப்பந்தாட்டம் ஒன்பது வீரர்களை கொண்டதாகவும் நிலையான விளையாட்டு நேரத்தை கொண்டதாகவும் அமைய சட்டங்களை இயற்றினர். அடிப்பந்தாட்டம் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய கூட்டமைப்பு(NABBP) 1858 ம் ஆண்டு நிறுவப்பட்ட பொழுது அவ் குழுமத்தின் விதிமுறைகளை நிறுவும் செயற்குழுவினை வழிநடத்தினார். அடம்ஸ், விளையாடும் களம் 90 அடிகள் (27 m), bound விதி எனப்படும் ஒரு துள்ளு(bounce)ற்கு பின்பு பிடி எடுக்கப்படும் பந்துகளையும் ஆட்டமிழப்பாக கருதும் விதிகளை நிறுவினர். 1862 ம் ஆண்டில் அடம்ஸ் Knickerbockers மற்றும் NAABP இல் வகித்த தனது பதவிகளை இராஜினாமா செய்தார். பல தசாப்தங்களாக மழுங்கிப்போய் இருந்த விதிகளை புதிப்பிப்பதில் பங்கு வகித்தார். 1899 ம் ஆண்டு அடம்ஸ் இன் மறைவிற்கு பின் அவர் பங்களிப்பு செய்த விதிகள், பல தசாப்தங்களுக்கு மழுங்கிப்போய் இருந்தன. அதன் பின் 1980 ம் ஆண்டு The New York Times பத்திரிகை அடம்ஸ் இனை பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தது. 1993 ம் ஆண்டளவில் ஆராய்ச்சியாளர் ஜான் தோர்ன்(John Thorn), அடம்ஸ் இன் பங்களிப்பினை வெளிக்கொணர்ந்து எழுதியிருந்தார். வேறு பல வரலாற்றாசிரியர்கள் அடம்ஸ் இனை விளையாட்டுத் துறைக்கு உதவி செய்தவர் என குறிப்பிட்டுள்ளதுடன், ஆராய்ச்சியாளர் Thorn அவரை அடிப்பந்தாட்டம் விளையாட்டின் தந்தைகளில் முதன்மையானவர் என குறிப்பிட்டுள்ளார்.

Yale பல்கலைக்கழகம் மற்றும் Harvard மருத்துவ பாடசாலையில் பட்டப்படிப்பை முடித்தார். 1830 ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் அடம்ஸ் மருத்துவத்துறையில் சேவையாற்றத்தொடங்கினர். அவர் Knickerbockers இல் 1865 ம் ஆண்டு உறுப்பினராக New York நகரத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் மருத்துவத் துறையில் பஜிற்சியை பெற்றுக்கொண்டார். பின்பு மருத்துவத் துறையை கைவிட்ட அவர் வங்கித்தலைவராகவும் Connecticut legislature இல் உறுப்பினர் ஆகவும் இருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

Mont Vernon இல் பிறந்தார், New Hampshire (கார்த்திகை 1, 1814). அடம்ஸ், டானியல் நான்சி அடம்ஸ் தம்பதிகளின் ஐந்து பிள்ளைகளில் நான்காவதாக பிறந்தார். மூத்த டானியல் அடம்ஸ் மருத்துவர் ஆகவும் எழுத்தாளர் அகவும் இருந்தார். அவர் எழுதிய கணிதப்புத்தகம் 1800 இன் நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவில் பரவலாக பாவிக்கப்பட்டது. 1831 தொடக்கம் 1838 வரை முன்று கல்லூரிகளில் கல்வி பஜின்றார். அடம்ஸ் இரண்டு வருடங்கள் Amherst கல்லூரியில் கல்வி பஜின்றார். பின்பு Yale பல்கலைக்கழகத்தில் இணைந்த அவர் 1835 ம் ஆண்டளவில் பட்டதாரியாக வெளியேறினர்.

அடம்ஸ் அவரின் கல்வியினை 1893 ம் ஆண்டு harvard மருத்துவப் பாடசாலையில் தொடர்ந்தார், மருத்துவத் துறையில் ஆசிரியர் ஆனார். தனது தந்தையுடன் இணைந்து மருத்துவப் பஜிர்சியும் பெற்றார். New York இல் அமைந்திருக்கும் ஏழை குடியிருப்பாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் மருத்துவக் கூடங்களில் சேவையாற்றினார். அவர் ஆற்றிய சேவையினால் அவருடைய டாக் எனும் பெயரின் பகுதி மிகவும் பிரபலம் அடைந்தது.

விளையாட்டில் ஈடுபாடு

[தொகு]

அடிப்பந்தாட்டம் ஆராய்ச்சியாளர் John Thorn இன் கருத்துக்கு இணைய, 1839 ம் ஆண்டு அடம்ஸ் அடிப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் ஆகினர். 1896ம் ஆண்டு பத்திரிகைக்காக அடம்ஸ் வழன்கிய நேர்காணலில், உடற்பயிற்சிக்காக மருத்துவ நண்பர்களுடன் இணைந்து அடிப்பந்தாட்டம் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். 1840 ம் ஆண்டின் ஆரம்பத்தில் New York அடிப்பந்தாட்டம் கழகத்தில் விளையாட்டு வீரராக இருந்தார். இவ் அணி பல அடிப்பந்தாட்டம் வரலாறுகளில் பங்கெடுட்திருக்கும் New York Knickerbockers இற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே விளையாட ஆரம்பித்தது.

A drawing of several members of the New York Knickerbockers baseball team. One player is holding a baseball bat, while behind him three members are sitting or standing in front of a house.
Knickerbockers பயிற்சி நேரத்தின் பொழுது, as depicted by Homer Davenport. Adams took leadership in pushing other club members to attend practice.

புரட்டாசி 23, 1845 ம் ஆண்டு Knickerbockers இனால் உருவாக்கப்பட்ட அணிக்கு உறுப்பினர் ஆகுவதற்கு அடம்ஸ் க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பினை ஏற்றுகொண்ட அவர் தனது சக மருத்துவத் துறை நண்பர்களுடன் இணைந்து கொண்டார். அவர் பின்னாளில்,Knickerbockers இன் உருவாக்கத்தில் New York அடிப்பந்தாட்டம் கழகத்தின் உறுப்பினர்கள் இருந்ததாக தெரிவித்தார். கழகத்தின் குறிப்புக்கோப்புகள் அடம்ஸ் உறுப்பினர் அக கார்த்திகை 18, 1845 ஆண்டு இருந்தார் என்பதை உறுதிப்படுத்துகின்றன. கழகம் 1846 ம் ஆண்டளவில் வெளி எதிரனிகளுடன் போட்டிகளை ஒழுங்குபடுத்தியது. ஆணி 5 இடம்பெற்ற கூட்டத்தில், 3 பேர் அடங்கிய செயற்குழுவுக்கு அடம்ஸ் தெரிவு செய்யப்பட்டார். அவர்களின் இலக்கு New York அடிப்பந்தாட்டம் கழகத்துக்கு எதிராக போட்டி ஒன்றினை ஒழுங்கு படுத்துவதாக இருந்தது. அவர்களின் இலக்கு நனவானதுடன் போட்டி ஆணி 19 அன்று ஒழுங்கு செய்யப்பட்டது. அப்போட்டியில் Knickerbockers 23-1 என தோல்வி அடைந்தது, அடம்ஸ் ஒரு ஆட்டமிழப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் எந்தவொரு ஓட்டத்தையும் பெறவில்லை.

Knickerbockers 1847 தொடக்கம் 1850 ஆண்டு காலப்பகுதியில் வேறு கழகங்களுக்கு எதிராக எந்தவொரு ஆட்டத்தையும் ஆடவில்லை. இக் காலப்பகுதியில், அவர்கள் அணியினை இரண்டாக பிரித்து வாரத்திற்கு இரண்டு தடவைகள் தமக்குள் விளையாடி பயிற்சி செய்து வந்தார்கள், அடம்ஸ் சக விளையாட்டு வீரர்களை இந்த பயிற்சிப்போட்டிகளில் பங்கெடுக்க அழுத்தம் கொடுத்தார். குறைத்த வீரர்கள் வருகை தரும் சந்தர்பங்களில், குறைந்த எண்ணிக்கையான வீரர்களுடன் விளையாடும் வகையில் அடிப்பந்தாட்டம் இனை மாற்றி அமைத்து விளையாடினர். 1851 ஆணி மாதம் இரண்டு தடவைகள்,Washington அடிப்பந்தாட்டம் கழகத்திற்கு எதிராக 21-11, 22-20 என வெற்றியினை பெற்றுக்கொண்டார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்_அடம்ஸ்&oldid=2896183" இலிருந்து மீள்விக்கப்பட்டது