டசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டசின் (dozen) என்பது 12 கொண்ட ஒரு தொகுதியைக் குறிக்கும். இயற்கை நிகழ்வான சந்திரனின் இயக்கத்தில் ஒரு சூரியனின் சுற்றில் 12 சந்திரனின் சுற்று ஏற்படுகிறது. இதனால் பன்னிரண்டு பன்னிரண்டாக எண்ணும் பழக்கம் பழங்காலத்திலேயே தோன்றியிருக்கலாம். எனவே டசின் என்பதும் மிகப் பழைய எண்ணும் முறையாக இருக்கக்கூடும். அத்துடன், இதிலும் சிறிய பிற எண்களைப் போலன்றி பன்னிரண்டைப் பல்வேறு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம் (12 = 2 x 6 = 3 x 4 = 1 x 12) என்பது ஒரு வசதியாகும். 12 ஐ அடியாகக் கொள்ளும் வழக்கம் மெசொப்பொத்தேமியாவில் தோன்றியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இது ஒருவரின் கட்டை விரலைப் பயன்படுத்தி ஏனைய நான்கு விரல்களில் காணப்படும் பிரிவுகளை எண்ணும் பழக்கத்தால் ஏற்பட்டிருக்கக்கூடும். இதன் படி ஒரு கையைப் பயன்படுத்தி 12 வரை எண்ண முடியும். இரண்டு கைகளையும் பயன்படுத்தி 144 வரை எண்ண முடியும். இது 12 டசின். 12 டசின்களை ஒரு குறொஸ் என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டசின்&oldid=2260753" இலிருந்து மீள்விக்கப்பட்டது