ஜோதி மப்சேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதி மப்சேக்கர்
பிறப்பு1950
தேசியம் இந்தியா
பணிநூலகர், நாடக ஆசிரியர், சமூக ஆர்வலர்

ஜோதி மப்சேக்கர் (Jyoti Mhapsekar) (பிறப்பு 1950) நூலகராகவும் நாடக ஆசிரியராகவும் பணியாற்றினார். "ஸ்த்ரீ முக்தி சங்காதனம்" என்ற நிறுவனத்தின் (பெண்கள் விடுதலை இயக்கம்) நிறுவனராகவும் தலைவராகவும் இவர் அறியப்படுகிறார். இவரது பணிகளுக்காக நாரி சக்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

1950களில் பிறந்தார். இவரது பெற்றோர் இருவரும் சுதந்திர போராளிகள் ஆவர். ஏழைகளுக்காக உருவாக்கிய தனது தாய் நிறுவிய பள்ளிகளில் பயின்று, பின்னர், கல்லூரிக்குச் சென்றார். அங்கு இவர் விலங்கியல் மற்றும் நூலக அறிவியலில் பட்டம் பெற்றார். [1] பின்னர் இவர் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். [2]

பணிகள்[தொகு]

1975 ஆம் ஆண்டில் இவரும் மற்ற ஆறு பெண்களும் ஸ்திரீ முக்தி சங்காதனத்தை (பெண்கள் விடுதலை இயக்கம்) நிறுவினர். [3] 1983 ஆம் ஆண்டில் இவர் முல்கி ஜாலி ஹோ என்ற நாடகத்தை எழுதினார். இது ஸ்திரீ முக்தி சங்காதனா எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்ந்தது. இது மராத்திய மொழியிலும் பின்னர் பிற மொழிகளிலும் நிகழ்த்தப்பட்டது. இந்த நாடகம், பொழுதுபோக்குகளின் போது பெண்களின் இரண்டாம் நிலை குறித்த பிரச்சினையை எழுப்பியது.

நாடக ஆசிரியராக இருந்த இவர், சர்வதேச பெண்கள் நாடக ஆசிரியர்கள் அமைப்பில் சேர்ந்தார். அங்கு இவர் ஒரு அமைப்பாளராக இருந்தார். நவம்பர் 2009 இல் மும்பையில் அந்த ஆண்டு சர்வதேச கூட்டத்தை ஏற்பாடு செய்த குழுவிலும் இருந்தார். [4]

இவர் ஆர்க்கிடெக்சர் அகடாமியில் தலைமை நூலகராக இருந்தார். ஆனால் தனது பிற விருப்பங்களில் கவனம் செலுத்துவதற்காக இதிலிருந்து ஓய்வு பெற்றார். [5] She became the President of the Stree Mukti Sanghatana.[6] பின்னர், ஸ்திரீ முக்தி சங்கதானத்தின் தலைவரானார். [7]


விருதுகள்[தொகு]

2016ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தன்று நாரி சக்தி விருது பெற தேர்வு செய்யப்பட்டார். புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். இவருடன் சேர்த்து மேலும் பதினான்கு பெண்களும் ஏழு நிறுவனங்களும் அன்று கௌரவிக்கப்பட்டன. [8]

இவர் 2016 இல் லோரியல் வுமன் ஆஃப் வொர்த் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [6]

இவர் 2001 இல் அசோக சக ஊழியரானார் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jyoti Mhapsekar | Ashoka | Everyone a Changemaker". www.ashoka.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
  2. "Jyoti Mhapsekar - President - Stree Mukti Sanghatana ( Women's Liberation Organisation)" (PDF). World Sustainable Development Summit 2021. 2018. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
  3. 3.0 3.1 "Jyoti Mhapsekar | Ashoka | Everyone a Changemaker". www.ashoka.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
  4. "India Hosts 8th International Women Playwrights' Conference... Registrations Open : www.MumbaiTheatreGuide.com". www.mumbaitheatreguide.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
  5. "Jyoti Mhapsekar - President - Stree Mukti Sanghatana ( Women's Liberation Organisation)" (PDF). World Sustainable Development Summit 2021. 2018. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
  6. 6.0 6.1 "Women of Worth: About the Nominee - Jyoti Mhapsekar". Women Of Worth (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
  7. "Women of Worth: About the Nominee - Jyoti Mhapsekar". Women Of Worth (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
  8. "Give women freedom to exercise choices at home, workplace: President Pranab Mukherjee". The Economic Times. 2016-03-08. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/give-women-freedom-to-exercise-choices-at-home-workplace-president-pranab-mukherjee/articleshow/51312597.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_மப்சேக்கர்&oldid=3130738" இலிருந்து மீள்விக்கப்பட்டது