உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே சோ
பிறப்பு周杰倫
18 சனவரி 1979 (அகவை 45)
林口區, தாய்பெய்
படித்த இடங்கள்
  • Tamkang High School
பணிநடிகர், இசையமைப்பாளர், ராப்பர், record producer, இயக்குனர்
பாணிபரப்பிசை
விருதுகள்Asia's Most Influential Taiwan, Asia's Most Influential Taiwan
Jay Chou at a promotional event for Kung Fu Dunk in January 2008

ஜே சோ (பிறப்பு 18 ஜனவரி 1979)[1] தாய்வான் நாட்டைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர், இசைத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.[1]

கடந்த 2000-ஆவது ஆண்டில் அவருடைய முதல் பாடல் தொகுப்பான ஜே வெளியானது. அதனை அல்பா இசை என்ற நிறுவனம் வெளியிட்டது. அது ஆசியா முழுவதும் குறிப்பாக தய்வான், சீனா, ஆங்காங்கு, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, கொரியா, ஜப்பான் மற்றும் மேற்குலகில் வாழ்கின்ற புலம்பெயர் ஆசிய சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏறத்தாழ 30 லட்சம் ஆல்பம் இதுவரை விற்பனையாகியுள்ளது. அது மட்டுமின்றி பல விருதுகளையும் அது பெற்றுத் தந்திருக்கின்றது. அவரது ஆல்பத்தில் பாடிய பிற பாடகர்களுக்காகவும் ஜே சோ பாடல்களையும் எழுதியிருக்கின்றார். .[1] கடந்த 2003-ஆம் ஆண்டில் பிரபல டைம்ஸ் இதழின் முகப்பில் அவரைப் பற்றிய விவரணக் கட்டுரை வெளியிடப்பட்டது,[1] ஆசிய பாப்பிசையின் புதிய மன்னன் என அவரைப் பற்றி அவ் இதழ் புகழாரமும் சூடியது. அதன் பின் ஆறுமுறை உலகப் பயணங்களை மேற்கொண்டு, பல பெருநகரங்களில் இசை நிழச்சியை நடத்தியிருக்கின்றது. அந்த இசை நிகழ்ச்சிகளை ஏறத்தாழ 1 கோடி பேர் கண்டு களித்துமிருக்கின்றனர்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Wang, Ching-yi; Hsiao, Scully (22 December 2014). "Pop star Jay Chou confirms marriage plan" இம் மூலத்தில் இருந்து 27 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141227194610/http://focustaiwan.cna.com.tw/news/afav/201412220019.aspx. பார்த்த நாள்: 28 December 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே_சோ&oldid=3877259" இலிருந்து மீள்விக்கப்பட்டது