ஜே. சி. டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜே. சி. டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (JCT College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், மதுக்கரை, பிச்சனூர் சிற்றூரில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது அடித்தட்டு மக்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கத்துடன், ஸ்ரீ ஜகந்நாத் கல்வி நலவாழ்வு அறக்கட்டளையால் தொடங்கியது.

உள்கட்டமைப்பு[தொகு]

நூலகம்

இக்கல்லூரி நூலகத்தில் ஏ.ஐ.சி.டி.இ மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளைகளின்படி அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய 500000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. எழுத்தாக்கங்கள், குறிப்புதவி நூல்கள், கல்வி கலைக்களஞ்சியங்கள், ஆண்டு மலர்கள், பத்திரிகைகள் மற்றும் வரைபடங்கள், ஒலி மற்றும் காணொளிப் பேழைகள் மற்றும் மென்பொருள் பொருட்கள் உள்ளிட்ட பிற மின்னணு ஆய்வுப் பொருட்கள் மாணவர்களுக்கு இலவசமாக அணுகக்கூடிய வகையில் கிடைக்கின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகை சந்தாக்கள் உள்ளன.

கணினி ஆய்வகம்

இணைய வசதியுடன் கூடிய கண்ணி மையம் இங்கு மாணவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட கணினிகள் அண்மைய வசதிகளுடன் உள்ளது

வகுப்பறை

இந்த கல்லூரியானது 1,50,000 சதுர மீட்டரைவிட கூடுதலான பரப்பளவில் கட்டிடங்களில், உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள், பட்டறைகள், சி.என்.சி லேத் மற்றும் சி.என்.சி எந்திர மையம், உள் விளையாட்டு அரங்கம், தடகள வசதிகள் போன்றவை உள்ளன.

வசதிகள்[தொகு]

விடுதிகள்

மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன.

தொழிலகங்களை பார்வையிடல்

இக்கல்வி நிறுவனமானது தொழில் நிறுவனங்களை பார்வையிட ஏற்பாடு செய்கிறது.

போக்குவரத்து

மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்து கல்லூரியை வந்தடைய ஏதுவாக முக்கிய இடங்களிலிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வேலை வாய்ப்பு பிரிவு[தொகு]

படிப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில், கல்லூரியானது வேலைவாய்ப்பு பிரிவை ஏற்படுத்தியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]