ஜேய்னி இரேதேபகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேய்னி இரேதேபகு (Jani Radebaugh) (/ˈni ˈrædəbɔː/; JAY-nee-_-RAD)[1] அல்லது ஜேனி இராதேபவு ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியராக உள்ளார்.[2] இவர் கோள்கள் ஆய்வில் வல்லுனர் ஆவார்.இவர் எப்படி புடவி இயங்குகிறது அறிவியல் சார்ந்த தொலைக்காட்சி வலையின் கண்டுபிடிப்புத் திட்ட நிகழ்விலும் பிரித்தானிய ஒலிபரப்பு அலைவரிசையிலும் நோவா அலைவரிசையிலும் அடிக்கடி தோன்றி அறிவியல் பரப்புரை நிகழ்த்துகிறார் [3]. மேலும் இவர் அறிவியல் அலைவரிசையில் கோள்களும் அதற்கு அப்பாலும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இவர் காசினி இராடார் கருவியின் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து[4] திரேகான்பிளை எனும் தரையிறங்கி விண்கலத் திட்ட முன்மொழிவுக்குப் பங்களிப்பு செய்துள்ளார்[5]. அதோடு இவர் கலீலியோ விண்கலத் திட்டம், அயோவா எரிமலை நோக்கீட்டுத் திட்ட முன்மொழிவு, செவ்வாய் நடுவரைத் திட்டம் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.[6]

இரேதேபகுவும் காசினித் திட்டக் கூட்டாளிகளும் 2012, திச்ம்பரில் 200 கல் (324 கிமீ) நீலமுள்ள நைல்நதியொத்த வேது புளூமினா எனும் நீர்ம மீத்தேன் பேராறு காரிக்கோளின் தித்தன் நிலாவில் ஓடுவதைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.[7]

இவர் சூரியக் குடும்பம் சார்ந்த வான்பொருட்களாகிய காரிக்கோளின் தித்தன் நிலா, எத்தியோப்பிய அபார் பள்ளத்தாக்கு, வானுவாட்டு, கிளாவுவியா சார்ந்த உள்ள அனற்குழம்பு ஏரிகள், வியாழனின் நிலாவான இயூவில் நிலவும் அனற்குழம்பு ஏரிகள் ஆகியவற்றின் நிலவியல் கூறுபாடுகளை ஆய்வு செய்ய, புவியில் அமையும் சகாரா, அரேபிய, நாமிபு பாலைவனங்களின் மணற்குன்றுகள் பலவற்றை ஆய்வு செய்துள்ளார்.[8] செவ்வாயிலும் வெள்ளியிலும் தித்தன் நிலாவிலும் அமையும் காற்றாக்க முகடுகளைப் புரிந்துகொள்ள இவர் இரானில் உள்ள உலூத் பாலைவனத்துக்குச் சென்று அங்குள்ள யார்தாங்குகள் எனப்படும் காற்றாக்க முகடுகளை ஆய்வு செய்தார், மேலும் இவர் விண்கல்தேட்ட அமெரிக்க அண்டார்க்டிகா ஆய்வில் பல கட்டங்களில் பங்கேற்றுள்ளார். இங்கு இவர் சூரியக் குடும்பம் சார்ந்த வான்பொருட்களாகிய நிலா, செவ்வாய், விண்கற்களின் பதக்கூறுகளை மீட்க உதவியுள்ளார்.[9].


மேற்கோள்கள்[தொகு]

  1. How the Universe Works, "Strangest Alien Worlds", season 5, episode 9. First aired 2017-02-07. The narrator says Radebaugh's name at about 6:00 into the episode.
  2. "Jani Radebaugh". www.planetary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  3. "Jani Radebaugh". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2018-04-08.
  4. "NASA - Cassini Spots Mini Nile River on Saturn Moon". www.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-08.
  5. Chang, Kenneth (2017-12-19). "Finalists in NASA’s Spacecraft Sweepstakes: A Drone on Titan, and a Comet-Chaser" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2017/12/19/science/nasa-new-frontiers-finalists.html. 
  6. admin (2014-11-15). "Jani Radebaugh – Planetary Scientist – Brigham Young University" (in en-US). Spacefest. https://www.spacefest.info/?avada_portfolio=jani-radebaugh. 
  7. "Cassini Finds a New Nile River on Titan | DiscoverMagazine.com". Discover Magazine. http://discovermagazine.com/2013/nov/07-titan-nile. 
  8. TEDx Talks (2015-05-08), Exploration for Discovery | Jani Radebaugh | TEDxBYU, பார்க்கப்பட்ட நாள் 2018-04-08
  9. "2016 / 2017 Field Season | ANSMET, The Antarctic Search for Meteorites". caslabs.case.edu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேய்னி_இரேதேபகு&oldid=2993405" இலிருந்து மீள்விக்கப்பட்டது