ஜேம்ஸ் கோமி
Appearance
ஜேம்ஸ் கோமி (James Brien Comey Jr.திசம்பர் 14 1960) என்பவர் அமெரிக்க வழக்கறிஞர். அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எப்.பி. ஐ. இயக்குநராக 2013 செப்டம்பர் முதல் 2017 மே வரை பதவி வகித்தவர். குடியரசுத் தலைவராக இருந்த பராக் ஒபாமா இவரை இப்பதவிக்கு அமர்த்தினார்.[1]
பதவி நீக்கம்
[தொகு]2006 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலின் போது ஐனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இலாரி கிளிண்டனின் பிரச்சார மின்னஞ்சல்கள் வெளியாகின. டிரம்புக்கு ஆதரவாக ரசியா அவற்றைத் திருடி வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கும், ரசியாவுக்கும் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இலாரி கிளிண்டன் மின்னஞ்சல் விவகாரம் விசாரணையைக் கையாண்ட விதம் தொடர்பாக ஜேம்ஸ் கோமியை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்.[2]