உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேசிபி (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
JCB compact excavator, 2013.JPG
JCB compact excavator, 2013.JPG
JCB
JCB
JCB
JCB

ஜே. சி. பேம்போர்டு அகழ்வு நிறுவனம் (J. C. Bamford Excavators Limited) என்பதன் சுருக்கமே ஜேசிபி நிறுவனம் ஆகும். ஜேசிபி நிறுவனம் 1945 ஆம் ஆண்டு ஜோசப் சிரில் பேம்போர்டு என்பவரால் தொடங்கப்பட்டது. அவரின் பெயரே நிறுவனத்திற்கு சூட்டப்பட்டது. இது கட்டுமானம், விவசாயம், இடிப்புப்பணி, பூமி தோண்டுதல் அல்லது அகழ்வுப் பணிக்கான கனரக வாகனங்கள் தயாரிக்கும் முதன்மை நிறுவனம் ஆகும்.மேலும் இந்நிறுவனம் கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது.. [1] மேலும் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள 300 வகையான இயந்திரங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. ஆசியா , ஐரோப்பா, வட அமெரிக்கா, உள்ளிட்ட கண்டங்களில் இருக்கும் 22 தொழிற்சாலைகளில் இருந்து வாகனங்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதுமுள்ள 150 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.[2] [3]

வரலாறு[தொகு]

20ஆம் நூற்றாண்டு[தொகு]

1948-ல் ஆறு பேரை வேலை ஆட்களாக வைத்துக்கொண்டு முதல் நீரியல் துரப்பணம் இயந்திரத்தை உருவாக்கினார். 1950-ல் இது இயந்திர தயாரிப்பு நிறுவனமாக மாறியது. ஓரு வருடத்திற்குப் பின் இந்த இயந்திரத்தின் நிறம் மஞ்சளாக மாற்றப்பட்டது. 1953 ல் பின் பக்க துாக்கு இயந்திரமாக உருவாக்கப்பட்டது. 1957-ல் ஹைட்ரா டிக்கா என்ற முறையில் அதிக பளு துாக்கும் இயந்திரமாகவும் வேளாண்மை மற்றம் கட்டிட வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1960-ல் ஜே சி பி நீரியல் இழுவை இயந்திரம் என்ற உருவில் வட அமெரிக்கா சந்தையில் நுழைந்து வெற்றி பெற்றது.1978 ல் பளு இயந்திரமாக உருவெடுத்தது. 1979-ல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது.1991-ல் ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் கூட்டுடன் உற்பத்தி செய்தது. இரண்டு வருடங்கள் கழித்து அமெரிக்கா கொரியா பிரேசில் ஆகிய நாடுகளில் தனது உற்பத்தியை பெருக்கியது.

21ஆம் நுாற்றாண்டு[தொகு]

40 வருடங்களுக்குப் பிறகு 2004-2005ஆம் ஆண்டுகளில் ஜேசிபி 444 டீசல் இயந்திரத்தை உற்பத்தி செய்தது. ஜெர்மன் தொழில் நுட்ப இயந்திரக் கருவிகளைக் கொண்டு புதிய தொழிற்சாலைகளை சீனாவில் நிறுவியது. 2006 ம் ஆண்டு 4000 தொழிலாளர்கள் கொண்ட தொழிற்சாலையாகச் செயல்பட்டது.2007 ல் கட்டுமானத் தொழில் நுட்ப போட்டிக்கு அதிக பளு உள்ள தயாரிப்புகளை திட்டமிட்டு உருவாக்கியது. 2009-ல் இந்தியாவில் இது பெரிய தொழில்சாலைகளை அரியானா மாநிலத்தில் நிறுவியது.

உலகளாவிய சந்தை[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஜெர்மனி தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தொழிற்சாலைகளை ஆரம்பித்தது.12000 ஊழியர்களுடன் 150 நாடுகளில் 1500 பணிமனைகளை உருவாக்கியது.இத்தொழில்சாலைகளில் 300 தயாரிப்புகளை தயாரித்தது.

ஜேசிபி யின் தயாரிப்புகள்[தொகு]

  • ஜேசிபி அறுவடை செய்யும் இயந்திரம்
  • ஜேசிபி நில சீரமைப்பு மற்றும் இணை தயாரிப்புகள்
  • ஜேசிபி வாடகை அமைப்பு இயந்திரம்
  • ஜேசிபி இணைப்புகள்
  • ஜேசிபி பளு தயாரிப்புகள்
  • ஓட்டுனர் தொடர் அமைப்பு

இது போன்ற இன்னும் பல தயாரிப்புகளை உற்பத்தி செய்தது. இந்தியாவில் பரிதாபாத் (அரியானா) ஜெய்ப்பூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் ஜேசிபி நிறுவனம் இயங்கி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. name=yorkshirepost>"JCB reaps reward for 'tough action' as profits show a rise". Yorkshire Post. 15 July 2010. http://www.yorkshirepost.co.uk/businessnews/JCB-reaps-reward-for-39tough.6422560.jp. பார்த்த நாள்: 18 August 2010. 
  2. name=companyinfo
  3. name=manufacturing> "A Global Manufacturer". J C Bamford Excavators Limited. Archived from the original on 10 August 2011. பார்க்கப்பட்ட நாள் 27 September 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசிபி_(நிறுவனம்)&oldid=3573371" இலிருந்து மீள்விக்கப்பட்டது