ஜெ. எம். நல்லுசாமிப் பிள்ளை
ஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை (1864 - ஆகஸ்ட் 11, 1920) சைவ மறுமலர்ச்சியை உருவாக்கிய அறிஞர்களில் ஒருவர். பேச்சாளர், வழக்கறிஞர், சில காலம் நீதிபதியாக பணியாற்றினார். ஆங்கிலத்தில் சைவசித்தாந்த நூல்களை எழுதினார்.
வாழ்க்கைவரலாறு
[தொகு]திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1884ல் பி.ஏ பட்டம் பெற்றார். 1886ல் சட்டத்தில் பட்டமும் பெற்றார். 1887 ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்து கொண்டார். மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றிய பின் திருப்பத்தூர் மாவட்ட முன்சீப் ஆக பதவியேற்றார். பல வழக்குகளில் ஆங்கில அரசுக்கு ஒத்துப் போகும் நிலையை அவர் எடுக்கவில்லை என்பதனால் விசாரணை செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்பு மீண்டும் மதுரையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
குடும்பம்
[தொகு]1884ல் லட்சுமியம்மாளை மணந்தார். இவருக்கு ஒரு மகன் மூன்று பெண்கள். இவரது மகன் ராமநாதன் சைவ சித்தாந்தத்தின் ஆர்வம் உடையவராக அறியப்பட்டிருந்தார். இவர் மதுரையில் ஆகஸ்ட் 11, 1920 அன்று புற்றுநோயால் மரணம் அடைந்தார்.
பங்களிப்பு
[தொகு]- நல்லுசாமிப்பிள்ளை சொந்தசெலவில் “சித்தாந்த தீபிகை” என்ற சைவ இதழை நெடுங்காலம் நடத்தினார். அதில் சைவ சித்தாந்தத்தை நவீன நோக்கில் விரிவாக விளக்கினார்.
- Studies on Saiva Sithaantha எனும் சைவ சித்தாந்தம் குறித்த ஆங்கில நூலையும் எழுதினார்.
உசாத்துணை
[தொகு]- கே.எம்.பாலசுப்ரமணியம் எழுதிய ‘life and history of J.M.Nalluswami Pillai’
வெளி இணைப்புகள்
[தொகு]- Siddhanta Deepika - Complete 14 Volumes
- J M Nallaswami Pillai - A trail blazer in Saiva Siddhanta, V. Sundaram, News Today, 19 February, 2008
- ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி, ஜெயமோகன், மார்ச் 1, 2016