ஜெப் லோப்
Appearance
ஜெப் லோப் | |
---|---|
பிறப்பு | ஜெப் லோப் III ஐக்கிய அமெரிக்கா |
குடிமகன் | அமெரிக்கன் |
துறை (கள்) | எழுத்தாளர், நிர்வாக தயாரிப்பாளர் |
ஜெப் லோப் (ஆங்கில மொழி: Jeph Loeb) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் வரைகதை புத்தக எழுத்தாளர் ஆவார். இவர் சமல்லவில்லே மற்றும் லாஸ்ட் போன்ற தொலைக்காட்சி தொடரில் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளராகவும், கமாண்டோ மற்றும் டீன் வோல்ப் போன்ற படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் 2006 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2008 வரை ஹீரோஸ்[1] என்ற என்பிசி தொலைக்காட்சி தொடரில் எழுத்தாளர் மற்றும் இணை நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். 2010 இல் இவர் மார்வெல் தொலைக்காட்சியின் நிர்வாக துணைத் தலைவரானார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cynthia Littleton. "'Heroes' duo get the ax" Variety; November 2, 2008
- ↑ Andreeva, Nellie (June 28, 2010). "Marvel Entertainment Launches TV Division". Deadline. https://www.deadline.com/2010/06/marvel-entertainment-launches-tv-division/.