ஜென்னி வான் வெசுட்பலென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1830 ல் ஜென்னி மார்க்சு

ஜென்னி வான் வெசுட்பலீன் (Jenny von Westphalen) (1814 – டிசம்பர் 2, 1881) பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்சின் மனைவி ஆவார். இவரின் முழுப்பெயர் "ஜோனா பார்தா ஜூலி ஜென்னி வான் வெசுட்பலீன்" ஆகும். அவர் 1836 ஆண்டு கார்ல் மார்க்சுடன் நிச்சயக்கப்பட்டு 1843 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் மார்க்சுக்கும் 7 குழந்தைகள் பிறந்தன.

இவர் தன் கணவரின் போராட்டங்கள் காரணமாக வறுமையின் பிடியில் சிக்கி பெரும் அவதிபட்டார். அவர் தன் குழந்தைகளுக்கு பால் கொடுக்கக் கூட பணமின்றி கஷ்டப்பட்டார். எனினும் அவர் தன் கணவருக்கு உறுதுணையாக நின்றார். வரலாற்று அறிஞர்களால் வறுமையிலும் கார்ல் மார்க்சுடனான அவரின் காதலுக்காக பெரிதும் மதிக்கப்படுகின்றார். அதற்கு அவர் தன்னுடைய ஆசை பற்றி "அடுத்த பிறவியிலும் மார்க்சு தன் காதலனாகவும், அதனை வெளிக்காட்ட இதே வறுமையும் வேண்டும்" என கூறியதே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

பின்னணி[தொகு]

ஜென்னி வோன் வெசுட்பலீன் 1814 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று சால்வெடெலில் ஒரு பாரசீக பிரபு பரம்பரையின் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, லுட்விக் வான் வெசுட்பலீன்(1770-1842), சால்வெடெல் மற்றும் ட்ரியரின் பதிவு அலுவலராக பணியாற்றினார். அவருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார்.

திருமணம்[தொகு]

ஜென்னி வோன் வெசுட்பலீன் மற்றும் கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ் குழந்தைபருவத்திலிருந்தே நன்று அறிந்தவர்கள். அவர் கார்லை விட நான்கு ஆண்டுகள் மூத்தவர். அவரது தந்தை, லுட்விக் வான் வெசுட்பலீன், மார்க்ஸின் தந்தையுடைய நண்பர் ஆவார். அவர்கள் பதின்வயதுகளில் நெருங்கிய நண்பர்களாயினர். மார்க்ஸ் கருத்துப்படி, அவர் ட்ரியரின் உள்ள மிக அழகான பெண் என்பார். ஜென்னி மற்றும் கார்ல் 1836 முதல் காதல் வயப்பட்டனர். இறுதியில் ஜூன் 19, 1843 அன்று அவர்கள் பேட் க்ரூச்கிர்சே நகரின் க்ரூச்கிர்சே பாலோஸ்கிர்சே(Kreuznacher Pauluskirche) தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர். தங்கள் திருமணத்தை தொடர்ந்து, கார்ல் மற்றும் ஜென்னி மார்க்ஸ் பாரிசின் "ரியூ வானேயு"(Rue Vaneau) பகுதிக்குக் குடி பெயர்ந்தனர்.

குழந்தைகள்[தொகு]

ஜென்னி, கார்ல் மார்க்சு மற்றும் குழந்தைகளுடன்

கார்ல் மார்க்சு மற்றும் ஜென்னி மார்க்ஸ் காலவரிசைப்படி பின்வரும் ஏழு குழந்தைகளை பெற்றனர். அவர்கள்:

 • ஜென்னி கரோலின் (1 மே 1844-11 ஜனவரி 1883)
 • ஜென்னி லாரா (26 செப்டம்பர் 1845 - 26 நவம்பர் 1911) பெல்ஜியத்தில் பிறந்தார்
 • சார்லஸ் லூயிஸ் ஹென்றி எட்கர் ( 3 பிப்ரவரி 1847 - 6 மே 1855) பிரஸ்ஸல்ஸில் பிறந்தார்
 • ஹென்றி எட்வர்ட் கை (5 செப்டம்பர் 1849 - நவம்பர் 19,1850)
 • ஜென்னி ஈவ்லைன் பிரான்செஸ் (28 மார்ச் 1851 - 14 ஏப்ரல் 1852)
 • ஜென்னி ஜூலியா எலினோர் (16 ஜனவரி 1855 - 31 மார்ச் 1898)
 • லண்டனில் பிறந்து ஜூலை 6, 1857ல் இறந்த ஒரு பெயரிடப்படாத குழந்தை.

இவர் கணவர் மார்க்சின் போராட்டங்களால் ஏற்பட்ட வறுமை காரணமாக ஜென்னியின் குழந்தைகளில் 3 பேர் மட்டுமே அதிக காலம் உயிர் வாழ்ந்தனர்.

நாடு கடத்தப்படுதல்[தொகு]

ஜென்னி மற்றும் ஜென்னி லாரா
 • 1845 ஆம் ஆண்டில், பிரஞ்சு அரசியல் காவல் படை கார்ல் மார்க்ஸ் மற்றும் கர்ப்பிணியான ஜென்னியை வெளியேற்றினர். இதனால் 1844 ல் ஜென்னி அவரது தாயார் கரோலினை சந்திக்க அவரது குழந்தையுடன் தனியாக பயணம் செய்தார்.
 • 1848 இல் பிரஸ்ஸல்ஸ் காவல்துறையும் ஜென்னியை வெளியேற்றினர். எனவே பாரிஸில் இருந்து பின்னர் கோலோன் சென்றனர்
 • 1848 ல் பல ஐரோப்பிய நாடுகளில் புரட்சி நடந்தது.ப்ருச்சியன் அதிகாரிகள் கார்ல் மார்க்ஸை பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டு அவர் லண்டன் நகருக்கு தனது குடும்பத்துடன் சென்றார்.
 • 1849-1850 களில் லண்டனில் டீன் தெருவில் அவர்கள் வாழ்ந்தார். 1856 ல் ஜென்னியின் தாயார் இறந்தபோது அவர் கொடுத்த பணத்தை கொண்டு லண்டன் ஹாம்ப்ஸ்டெட்டில் மலைக்கு அருகே கிராப்டன் மாடிக்கு சென்றார்.

பின் வந்த ஆண்டுகளில் ஜென்னி மார்க்ஸ் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பிரான்ஸுக்கு ஒரு குடும்பப் பயணத்தின் போது 1881 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று தனது 67 வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். அவர் உடல் லண்டனில் புதைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்னி_வான்_வெசுட்பலென்&oldid=3778040" இலிருந்து மீள்விக்கப்பட்டது