ஜெசிகா இஸ்கந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெசிகா இஸ்கந்தர்
பிறப்புஜெசிகா இஸ்கந்தர்
சனவரி 29, 1988 (1988-01-29) (அகவை 36)
ஜகார்தா, இந்தோனேசியா
மற்ற பெயர்கள்ஜெடார்
பணிநடிகை, விளம்பர நடிகை, நிகழ்ச்சியாளர், பாடகர், நகைச்சுவையாளர் மற்றும் எழுத்தாளர்.
செயற்பாட்டுக்
காலம்
2005 முதல் தற்போது வரை
பெற்றோர்ஹார்டி இஸ்கந்தர் (தந்தை)
உளாந்தரி (தாயார்)
வாழ்க்கைத்
துணை
லுட்விக் வான் (m.2013–2015)
பிள்ளைகள்எல் பராக் அலெக்ஸாண்டர் (மகன்)
உறவினர்கள்ஹென்றி இஸ்கந்தர்(சகோதரர்)
டென்னிஸ் இஸ்கந்தர் (சகோதரர்)
யூடி இஸ்கந்தர்(சகோதரர்)
எரிக் இஸ்கந்தர் (சகோதரர்)

ஜெசிகா இஸ்கந்தர் (Yesisca Iskandar) எசிக்கா இஸ்கந்தர் என்றும் அழைக்கப்படும் இவர் 1988 ஜனவர் 29 அன்று பிறந்த இந்தோனேசிய நடிகை, விளம்பர நடிகை, நிகழ்ச்சியாளர், பாடகர், நகைச்சுவையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] ஜெசிகா ஜகார்த்தாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஜெசிகாவின் முதல்த் திரைப்படம் டியாலவ் மற்றும் மலேசியத் திரைப்படம் திவா என்பது இரண்டாவதுத் திரைப்படமாகும். இவரது பெற்றொருக்கு இவர் ஒரே மகள் மற்றும் 4 மூத்த சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை ஒரு முஸ்லிம் அவரது தாயார் ஒரு கிறிஸ்தவர் ஆவார்.

தொழில்[தொகு]

ஜெடார் என்பது அவரது புனைபெயர், விளம்பரங்களிலிருந்து தனது தொழிலைத் தொடங்கினார். முன்னர், ஜான் காஸாபிளான்காவில் உள்ள ஒரு விளம்பரப் பயிற்சிப் பள்ளியில் கலந்து கொண்டார்.ஜெஸிக்காவின் முதல்த் திரைப்படம் டியாலவ் மற்றும் மலேசியத் திரைப்படம் திவா என்பது இரண்டாவதுத் திரைப்படமாகும். 2008 முதல் 2012 வரை பல தொலைக்காட்சி தொடர் மற்றும் வினு பாஸ்டியன் உடன் எஃப்டிவியின் (தொலைக்காட்சித் திரைப்படம்) காடிஸ் பென்கான்டர் டீலுர் , விக்கி நிடின்கரோ மற்றும் ரியோ தேவான்டோ உடன் சின்டா புரா-புரா நியாசர் போன்றவற்றில் தோன்றியுள்ளார்.

ஜெடார் முதன்முறையாக மார்ச் 2011 முதல் ஆர்சிடிஐயின் தஸ்யாத்தில் ஒரு நிகழ்ச்சி வழங்குபவராக இருந்தார். 2012 இல் ஜெடார் இந்தோனேசியா புவி மணிநேர தூதுவராகவும் விளங்கினார்.[2] செப்டம்பர் 2018 ல், தாய்லாந்தின். ஆசியாஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் ஆறாவது பருவத்தின் 6 நிகழ்ச்சியின் விருந்தினராக ஜடேர் இருந்தார்.[3]

சொந்த வாழ்க்கை[தொகு]

ஜெசிகா ஜகார்த்தாவில் டிசம்பர் 11, 2013 இல் ஒரு ஜெர்மன் குடிமகனான வால்ட்பர்க் வொல்பெக் வால்ட்சீ குடும்பத்தின் லுட்விக் வான் என்பவரை புரோஸ்டஸ்டன்ட் தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார், இதில் பல உறவினர்கள் கலந்து கொண்டனர், இவர் ஜெசிகாவை விட இரண்டு வயது இளையவர் ஆவார். ஜனவரி 8, 2014 அன்று, இந்த திருமண பதிவு சிவில் பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்டது மற்றும் அவர்களது திருமணத்தின் மூலம் எல் பராக் அலெக்ஸாண்டர் என்ற ஒரு மகனை ஜூலை 21, 2014 அன்று பெற்றதாக ஜெசிகா ஒத்துக்கொண்டார். 2014 அக்டோபர் 13 அன்று, இந்தோனேசிய நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்ய ஜெசிக்காவின் கணவர் ஒரு வழக்கு பதிவு செய்தார். ஏப்ரல் 2015 ல், இந்தோனேசிய நீதிமன்றம் ஜெசிகா இஸ்கந்தர் மற்றும் லுட்விக் ஆகியோருக்கு இடையிலான திருமணத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது.

சுய சரிதை[தொகு]

2013 பிப்ரவரியில் ஜெசிகா தனது முதல் சுயசரிதையான, ஜேடர்: ஜெசிகா இஸ் ஜெசிகா என்ற நூலை வெளியிட்டார். டிசம்பர் 2014 இல், ஜெசிகா தனது இரண்டாவது சுயசரிதையான, ஜேடார் பவர்: லவ், லைஃப், லார்ட் என்பதை வெளியிட்டார், இதில் தனது முதல் மகன் எல் பராக் அலெக்ஸாண்டர்இன், அனுபவங்களைக் குறிப்பிட்டார்.[4]

கல்வி[தொகு]

ஜெசிகா புண்டா முலியா உயர் நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார், பின்னர் அவர் ஜகார்த்தா திரிசக்தி பல்கலைகழகத்தில் உட்புற வடிவமைப்பு முடித்தார். ஜெசிகா தொழில் காரணமாக மூன்று பருவகாலத் தேர்வுகளுக்குப் பிறகு தனது படிப்பை தொடரவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Bradley, Grant. "Stars get Indonesia hungry for NZ travel." New Zealand Herald. Saturday November 17, 2012. Retrieved January 18, 2013. "Indonesian celebrity chef Farah Quinn arrived yesterday to film cooking shows that will be fronted by model and actress Jessica Iskandar."
  2. "Earth Hour Jakarta, Indonesia".
  3. "Jessica Iskandar is a guest judge in Asia's next top model 2018". October 2, 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Guess what?: Jessica Iskandar releases biography". December 23, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசிகா_இஸ்கந்தர்&oldid=3448442" இலிருந்து மீள்விக்கப்பட்டது