ஜெகதீசன் மோகன்தாஸ் குமரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெகதீசன் மோகன்தாஸ் குமரப்பா (Jagadisan Mohandas Kumarappa) (1886-1957) ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1952-ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இவர் 1954-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். ஏப்ரல் 16, 1886-ஆம் ஆண்டில் பிறந்த இவர், ஸ்ரீ எஸ். டி. கொர்னேலியசு மற்றும் ஸ்ரீமதி எஸ்தர் ராஜநாயகம் ஆகியோரின் மகனாவார். இவரது மனைவி ரத்தினம் அப்பாசாமி, பிரபல வழக்கறிஞர் திவான் பகதூர் ஏ. எஸ். அப்பாசாமியின் மகள் ஆவார். இவர் 3 ஏப்ரல் 1952 முதல் 2 ஏப்ரல் 1954 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் சில நூல்களை எழுதிய ஆசிரியரும் ஆவார். இவர் நவம்பர் 1957 ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாளில் இறந்தார். இவர் தனது இளங்கலைப்பட்டத்தை ஓஹியோவிலும் மற்றும் முதுலைப்பட்டத்தை ஆர்வர்டிலும், முனைவர் பட்டத்தைக் கொலம்பியாவிலும் படித்தார்.

ஆதாரங்கள்[தொகு]