ஜிம் வால்ஷ்
ஜிம் வால்ஷ் | |
---|---|
சட்டசபை உறுப்பினர் | |
பதவியில் செப்டம்பர் 1997 – ஏப்ரல் 2016 | |
தொகுதி | Agricultural Panel |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 மே 1947 நியூ ரோஸ், வெக்ஸ்போர்ட் மாகாணம், அயர்லாந்து |
தேசியம் | அயர்லாந்து நாட்டவர் |
பிற அரசியல் தொடர்புகள் | சுயேட்சை (2015) |
துணைவர் | மேரி ஃபர்லாங் |
பிள்ளைகள் | 3 |
ஜிம் வால்ஷ் (பிறப்பு 5 மே 1947) ஓர் அயர்லாந்து அரசியல்வாதி ஆவார். இவர் 1997 முதல் 2016வரையில் சீனாட் ஐரேன் உறுப்பினராக உள்ளார். [1]
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]வால்ஷ் கவுண்டி வெக்ஸ்ஃபோர்டில் உள்ள நியூ ரோஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார் . இவர் நியூ ரோஸ் கிறிஸ்டியன் பிரதர்ஸ் பள்ளியில் பயின்றார் . இவர் மேரி ஃபர்லாங் என்பவரை மணந்தார்.பன்னாட்டு ஜூனியர் சேம்பரில் சட்டசபை உறுப்பினராகவும் உள்ளார் மற்றும் ஐரிஷ் சாலை ஹாலியர்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். [2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் 1974 இல் நியூ ரோஸ் டவுன் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒன்பது முறை மேயராகவும், 1979 முதல் 2004 வரை வெக்ஸ்ஃபோர்ட் மாகாண சங்கத்தின் உறுப்பினராகவும், 1992 முதல் 1993 வரை மேயராகவும் பணியாற்றினார். [3] வால்ஷ் 1997 முதல் 2002 வரை அயர்லாந்து உள்ளூர் அதிகாரசபை உறுப்பினர்கள் சங்கத்தின் தேசியத் தலைவராக இருந்தார்.
விக்கிபீடியா தொகுப்புகள்
[தொகு]செப்டம்பர் 2015 இல், வால்ஷ் தனது சொந்த விக்கிபீடியா பதிவைத் திருத்தியதை ஒப்புக் கொண்டார். மேலும் அந்தப் பதிவானது "ஓரின சேர்க்கை குழுக்களைச் சேர்ந்த ஒருவர்" திருத்தியதாகக் கூறினார். [4] மேலும் அந்தக் கட்டுரையில் இருந்த "சில தவறான கருத்துக்களை" தான் அகற்றிவிட்டதாகக் கூறினார், ஆனால் அவர் எந்தத் திருத்தங்களைச் செய்தார் அல்லது என்ன தவறு என்பதனைக் குறிப்பிடவில்லை.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ "Jim Walsh". Oireachtas Members Database. பார்க்கப்பட்ட நாள் 26 January 2010.
- ↑ "Senator Jim Walsh". Fianna Fáil website. Archived from the original on 25 January 2010. பார்க்கப்பட்ட நாள் 26 January 2010.
- ↑ "Jim Walsh". ElectionsIreland.org. பார்க்கப்பட்ட நாள் 26 January 2010.
- ↑ O'Reilly, Brian (27 September 2015). "Senator Jim Walsh admits editing his own Wikipedia page after it 'was changed by person from gay lobby groups'". Sunday Independent. http://www.independent.ie/irish-news/politics/senator-jim-walsh-admits-editing-his-own-wikipedia-page-after-it-was-changed-by-person-from-gay-lobby-groups-31561725.html.
- ↑ O'Reilly, Brian (27 September 2015). "Senator Jim Walsh admits editing his own Wikipedia page after it 'was changed by person from gay lobby groups'". Sunday Independent. http://www.independent.ie/irish-news/politics/senator-jim-walsh-admits-editing-his-own-wikipedia-page-after-it-was-changed-by-person-from-gay-lobby-groups-31561725.html.