ஜிம் பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேம்ஸ் வாலஸ் பர்க் (James Wallace Burke (12 சூன், 1930 – 2 பெப்ரவரி,1979) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக 24 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் 1951 முதல் 1959 ஆம் ஆண்டு வரை விளையாடினார். இவர் 44 ஆட்டப் பகுதிகளில் விளையாடி டக்கில் (ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல்) ஆட்டமிழக்காதாவர் எனும் சாதனை படைத்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பர்க் சிட்னியில் உள்ள மோச்மன் எனும் புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார். அதற்கு முன்பாக இவரது பெற்றோர் கெண்ட்டில் உள்ள புரூம்ளியில் வாழ்ந்து வந்தனர். இவரின் தாத்தாவான பெர்சி பர்க் கெண்ட் அணியின் குச்சக் காப்பாளராக விளையாடியுள்ளார். இவரின் தாய் கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். [2][3] பர்க் குழந்தைப் பருவத்திலேயே கோல்ஃப் மற்றும் துடுப்பாட்டம் போன்றவற்றை சிறப்பாக விளையாடினார். ஆனால் வயது குறைவாக இருந்த காரணத்தினால் அவருக்கு பல்கோவ்லா குழிப்பந்தாட்ட சங்கத்தில் இவரைச் சேர்க்கவில்லை. இவர் சிட்னி இலக்கணப் பள்ளியில் பயின்றார். தனது 14 ஆவது வயதில் இவர் முதலாவது முதல் தரத் துடுப்பாட்டப்போட்டியில் விளையாடினார். தனது 16 ஆம் வயதில் இவரின் சராசரி 94 ஆகும். இவரின் பள்ளியின் அதிகபட்ச சராசரி வைத்திருந்தவர் இவர் ஆவார்.[2]

முதல்தரத் துடுப்பாட்டம்[தொகு]

1948-49 ஆம் ஆண்டுகளில் பர்க் நியூசவுத் வேல்சு அணிக்காக விளையாடினார். இவர் குயீன்சுலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 134 ஓட்டங்களையும் எட்டு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இரு இலக்குகளையும் விட்டுக் கொடுத்தார்.[4] தனது 18 ஆவது வயதில் இவர் ஷெபீல்டு பருவப்போட்டிகளில் விளையாடினார். மேற்கு ஆத்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இவர் மட்டையாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் இரன்டு இலக்குகளையும் கைப்பற்றினார்.[4]

அதற்கு பிந்தைய இரண்டு ஆட்டப் பகுதிகளில் இவர் ஓர் ஆட்டப் பகுதியில் மட்டுமே ஐம்பது ஓட்டங்களை எடுத்தார். பின் அசட்ஸ் அணிக்காக விளையாடிய போட்டிகளில் 11 மற்றும் 19ஓட்டங்களை எடுத்ததால் இவர் 1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் தேர்வாகவில்லை. தனது அறிமுகப்போட்டித் தொடரில் ஏழு போட்டிகளில் 336 ஓட்டங்களை 37.33 எனும் சராசரியோடு எடுத்தார். பின் பந்துவீச்சில் 29 ஓவர்களை வீசி மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரின் ஐந்தாவது போட்டியில் கென் முலேமெனின் இலக்கினை தனது முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[5][6]

தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியிலிவர் தேர்வானார். அந்தத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறினார்.[7] அதனால் அவர் அணியிலி இருந்து நீக்கப்பட்டார். பின் அவர் டிசம்பர் மாதத்தில் அவர் நாடு திரும்பினார்.[8] தெற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது 20 ஆம் வயதில் 62 ஒட்டங்களையும் பந்துவீச்சில் 54 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்களை எடுத்தார்.அதற்கு அடுத்த தேர்வுத் துடுப்பாட்டப் போடியில் 27 ஓட்டங்களி விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார்.[9] அதன் பிறகு ஐந்து போட்டிகள் கொண்ட ஷெஃபீல்டு தொடரில் இவர் 292 ஓட்டங்களையும் ஏழு இலக்குகளையும் கைப்பற்றினார்.[8]

சான்றுகள்[தொகு]

  1. Walmsley, Keith (2003). Mosts Without in Test Cricket. Reading, England: Keith Walmsley Publishing Pty Ltd. p. 457. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0947540067.
  2. 2.0 2.1 Cashman et al., pp. 215–217.
  3. "Jim Burke". Wisden Cricketers' Almanack. Wisden. 1957. பார்க்கப்பட்ட நாள் 13 April 2010.
  4. 4.0 4.1 "Player Oracle JW Burke". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 May 2009.
  5. "Player Oracle JW Burke". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 May 2009.
  6. "Player Oracle JW Burke". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 May 2009.
  7. "List of match results (by year) Australia – Test matches". Cricinfo. Archived from the original on 24 December 2007. பார்க்கப்பட்ட நாள் 4 December 2007.
  8. 8.0 8.1 "Player Oracle JW Burke". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 May 2009.
  9. "Jim Burke". Wisden Cricketers' Almanack. Wisden. 1957. பார்க்கப்பட்ட நாள் 13 April 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_பர்க்&oldid=2816612" இலிருந்து மீள்விக்கப்பட்டது