ஜினா மற்றும் எடிபென்
ஜினா மற்றும் எடிபென் | |
---|---|
நாட்டுப்புறக் கதை | |
பெயர்: | ஜினா மற்றும் எடிபென் |
தகவல் | |
பகுதி: | அயோ நாகா |
ஜினா மற்றும் எடிபென், மோபுங்சுகெட்டைச் சேர்ந்த இரண்டு காதலர்கள், அவர்கள் சமூக அந்தஸ்து, மற்றும் குடும்பத்தில் உள்ள வேறுபாடுகளால் சோகமாகப் பிரிந்ததைப் பற்றிய அயோ நாகா நாட்டுப்புறக் கதையாகும். [1] [2]
கதையின் பின்னணி
[தொகு]எடிபென் மற்றும் ஜினா ஆகியோர் 12 ஆம் நூற்றாண்டில் மொபுங்சுகெட் கிராமத்தில் வசிப்பவர்கள். புத்திசாலி, அழகான மற்றும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த எடிபென், ஏழையும் அழுக்கானவனுமான, ஜினா ஒரு தகுதி குறைந்த குடும்பத்தை சார்ந்த பையன். எடிபென்னின் அழகும், திறமையும் அந்தப்பகுதி முழுவதும் எல்லாராலும் அறியப்பட்டது மேலும் பல பணக்கார மற்றும் அழகான ஆண்கள் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் ஜினாவின் அன்பாலும் வசீகரத்தாலும் எட்டிபென் வசீகரிக்கப்பட்டார்.அவர்கள் ஒருவரையொருவர் பிரிக்க முடியாதவர்களாக மாறினர். காலம் செல்லச் செல்ல, ஜினா மற்றும் எடிபென்னின் காதல் விவகாரம் கிராமவாசிகள் அனைவருக்கும் தெரிந்தது. எடிபெனின் பெற்றோர் அவர்களது உறவை முற்றிலுமாக எதிர்த்தனர், மேலும் எதிபென்னை மணமுடிக்க விரும்பினால் வரதட்சணையாக பெருமளவில் பணத்தை அளிக்க வேண்டும் என கேட்டனர். ஜினா வரதட்சணைக்கான பணத்தை ஏற்பாடு செய்வதற்கு முன்னரே, டெனியர் என்ற மற்றொரு பணக்காரர் மற்றும் அழகான மனிதருக்கு அந்த வரதட்சணையுடன் வந்ததால், அவருடன் எடிபென்னை திருமணம் செய்து வைத்தனர். ஆனால் எடிபெனின் திருமணம் அவளையும் ஜினாவையும் வயல்களில் ரகசியமாக சந்திப்பதைத் தடுக்கவில்லை. ஒரு நாள், ஜினாவும் எடிபெனும் வயல் வெளிகளில் சந்தித்து ஒன்றாக இருந்தபோது, டெனியர் அவர்களை கையும் களவுமாக பிடித்து எடிபென் மயங்கி விழும் வரை கடுமையாக அடித்து உதைத்தார். அதனால் அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து, நாளுக்கு நாள் அவளுடைய நிலை மோசமடைந்தது, இறுதியில் அவள் இறந்தாள். அதை அறிந்த ஜினா மிகவும் சோகமாகவும், அமைதியற்றவராகவும் மாறி, அவரும் நோய்வாய்ப்பட்டார், அவரும் குணமடையாமலே மரணமடைந்தார்.
எடிபென் மற்றும் ஜினாவின் காதல் அவர்களின் மரணத்திற்குப் பிறகுதான் இணைந்தது.
கலாச்சார மரபு
[தொகு]மேடை மற்றும் இசை நாடகம்
[தொகு]இந்த நாட்டுப்புற காதல் கதையானது பல மேடை நாடகங்களாக மாற்றப்பட்டுள்ளது. [3] [4]
இலக்கியம்
[தொகு]நபினா தாஸின் கவிதைகளில் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த சோக காவியமானது நாகாலாந்து முழுவதும் உள்ள பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. [5] [6]
ஜினா மற்றும் எடிபென் கோபுரம்
[தொகு]மோபுங்சுகெட்டின் சூழலியல் பூங்காவில் இரண்டு காதலர்களையும் நினைவுகூரும் கோபுரங்கள் மற்றும் கூடுதல் சிற்பங்களுடன் நினைவுகூரப்பட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History revisited: The romance of Etiben and Jina, a folk tale of Ao tribes". india360.theindianadventure.com. 15 May 2020. Retrieved 21 August 2020.
- ↑ "Famous places in Mopungchuket". www.famousplacesinindia.in. Archived from the original on 19 பிப்ரவரி 2023. Retrieved 21 August 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Beyond Headlines : Taste of folklore in Nagamese play Best debut Birthday gift". The Telegraph. 20 September 2007. Retrieved 21 August 2020.
- ↑ "Hill Theatre's Jina and Etiben mesmerizes a packed audience". Nagaland Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-01-11. Retrieved 2020-11-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Jina and Etiben". onlinefreenotes.com. Retrieved 21 August 2020.
- ↑ "17 May 2020 Class X English". YouTube. 17 May 2020. Retrieved 21 August 2020.