உள்ளடக்கத்துக்குச் செல்

ஜானி ட்ரை ஙுயென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜானி ட்ரை ஙுயென்
ஜானி ட்ரை ஙுயென், பாங்காக் சர்வதேச திரைப்பட விழா
பிறப்புபெப்ரவரி 16, 1974 (1974-02-16) (அகவை 50)
தெற்கு வியட்நாம் பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம்
பணிநடிகர், தற்காப்புக் கலைஞர், டூப்.

ஜானி ட்ரை ஙுயென் (பெப்ரவரி 16, 1974 (1974-02-16) (அகவை 50), பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம்) ஒரு திரைப்பட நடிகர். இவர் தற்காப்புக் கலைஞர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுகிறார்.

குடும்பம்[தொகு]

இவரது குடும்பம் வியட்நாம் திரைப்பட துறையில் பங்காற்றுகிறது. இவரது பாட்டனார் லியன் ஃபெங் வான் என்ற தற்காப்புக்கலையை உருவாக்கியவர். இவரது அண்ணன் சார்லி ஙுயென் ஒரு திரைப்பட இயக்குநர். இவரது தாய் சீனாவை சேர்ந்தவர். மேலும் இவருக்கு ஒரு தமக்கையும் இரு மகள்களும் இருக்கிறார்கள்.

திரைத்துறை[தொகு]

இவர் இதுவரை 24 திரைப்படங்களில் நடிகராகவும் 17 திரைப்படங்களில் சாகசராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தமிழ்
  • இவர் 7ஆம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் டாங் லீ என்ற பாத்திரத்தில் எதிர்நாயனாக நடித்திருக்கிறார்.
  • தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் வந்த கிரீன் காப்லின் கதாப்பாத்திரத்திற்கு இவர் டூப் போட்டிருக்கிறார்.[1]
  • டோனி ஜா நடித்த டாம் யம் கூங் திரைப்படத்தில் ஜானி என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்தவர் இவரே.

மேற்கோள்[தொகு]

  1. [1], see filmography
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானி_ட்ரை_ஙுயென்&oldid=2523635" இலிருந்து மீள்விக்கப்பட்டது