ஜவுளி அருங்காட்சியகம் (ஜகார்த்தா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவுளி அருங்காட்சியகம்
Museum Tekstil
ஜவுளி அருங்காட்சியகத்தின் முகப்புத் தோற்றம்
Map
நிறுவப்பட்டதுசூலை 28, 1976
அமைவிடம்ஜலான் ஐப்டா கே.எஸ். டுபுன் 4, மேற்கு ஜகார்த்தா, 11421, இந்தோனேசியா
வகைஜவுளி அருங்காட்சியகம்
வலைத்தளம்museumtekstiljakarta.com

ஜவுளி அருங்காட்சியகம் (Textile Museum (Jakarta)) (இந்தோனேசிய மொழி: Museum Tekstil) இந்தோனேசியாவின் மேற்கு ஜகார்த்தாவின் பால்மேராவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஜவுளி வகைகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

துவக்கம்[தொகு]

ஜகார்த்தாவின் ஆளுநராக இருந்த அலி சாதிகின் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக 1976 ஆம் ஆண்டில் ஜவுளி அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இந்தோனேசியாவின் முதல் பெண்மணியான டியென் சோஹார்டோ நினைவாக இது அமைக்கப்பட்டது. அவர் இதனை சூன் 28, 1976 ஆம் நாளன்று திறந்து வைத்தார். இந்தோனேசியாவில் துணிமணிகள் எப்போதுமே வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன. அவை ஆடைகளின் கூறுகளாகவோ அல்லது சடங்கு நிலையிலோ அல்லது சடங்கு பொருள்களாகவோ அமைந்துள்ளன. பாரம்பரிய ஜவுளி இந்தோனேசிய கலாச்சாரத்தின் வளமான அம்சமாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அவற்றின் தயாரிப்பாளர்களின் கலைத் திறனுக்கான சான்றாகவும் அது அமைந்துள்ளது. அவை உள்ளூர் வரலாற்றிற்கான ஒரு சாளரமாகவும் உள்ளது.[1]

வரலாறு[தொகு]

ஜவுளி அருங்காட்சியகத்திற்கான கட்டிடம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அது ஒரு பிரெஞ்சுக்காரரின் தனியார் வீடாக இருந்தது. பின்னர் அந்தக் கட்டிடம் அப்துல் அஜீஸ் அல் முஸ்ஸாவி அல் மூசா காதிம் என்ற படாவியாவின் துருக்கியத் தூதருக்கு விற்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டில், இந்த கட்டிடம் மீண்டும் கரேல் கிறிஸ்டியன் க்ரூக் என்பவருக்கு விற்கப்பட்டது.[2]

சுதந்திரக் காலத்திற்கான போராட்டத்தின் போது இந்த கட்டிடம் பாரிசன் கீமனன் ரக்யாட் ("மக்கள் பாதுகாப்பின் முன்னணி") என்ற அமைப்பின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இது லீ சியோன் பின் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. அவர் அதை சமூக விவகாரத் துறைக்கு வாடகைக்குத் தந்தார். அத்துறையானது அதனை முதியோருக்கான ஒரு நிறுவனமாக மாற்றியது. பின்னர் அந்தக் கட்டிடம் நகர அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.[2]

ஜூலை 28, 1976 ஆம் நாளன்று இந்த ஜவுளி அருங்காட்சியகமாக மேடம் டீன் சோஹார்ட்டோ என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.[3][4]

1970 களின் நடுப்பகுதியில், பாரம்பரிய ஜவுளி பயன்பாடு, அவற்றின் பயன்பாட்டினைப் பற்றிய புரிதல் மற்றும் உற்பத்தியின் அளவு மற்றும் தரம் ஆகியவற்றில் சரிவுகள் தோன்றின. அந்தச் சரிவானது தெரியும்படி அமைந்திருந்தது. அவற்றில் சில மிகவும் அரிதாகி இருந்தன. இதற்கான ஒரு முடிவை தேடும் எண்ணத்தில் ஜகார்த்தாவின் முன்னணி குடிமக்களின் ஒரு பிரிவினர் இந்தோனேசிய ஜவுளிப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பை நிறுவ முடிவு செய்தனர். அதன் விளைவாக ஹிம்புனன் வாஸ்ட்ராபிரெமா (ஜவுளி நேசிப்போர் சங்கம்) என்ற ஒரு அமைப்பானது 500 உயர்தர வகையிலான ஜவுளிகளை நன்கொடையாக வழங்கியது. அவற்றை அது அதன் உறுப்பினர்களின் சேகரிப்பிலிருந்து பெற்றது. ஜகார்த்தா நகரம் தனா அபாங் மாவட்டத்தில் ஒரு அழகான பழைய கட்டிடத்தை அவற்றை வைத்துக்கொள்வதற்காக வழங்கியது.[1]

சேகரிப்புகள்[தொகு]

இந்த ஜவுளி அருங்காட்சியகத்தில் இந்தோனேஷியன் பல வகையான பாரம்பரிய நெசவு வகைகளான ஜாவானீஸ் பட்டிக், படக் உலோஸ் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சியில் பாரம்பரிய நெசவு கருவிகள் மற்றும் ஜவுளி உற்பத்திக்கான உபகரணங்கள் ஆகியவை உள்ளன.[3][5]

செயல்பாடுகள்[தொகு]

அருங்காட்சியகம் அதன் பார்வையாளர்களின் தேவைகளைத் திருப்திப்படுத்துகின்ற வகையில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஆண்டு முழுவதும் ஆசியான் டெக்ஸ்டைல்ஸ் போன்ற தனியார் சேகரிப்பாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயன்மைகளை மேற்கொள்கிறது. அப்போது கண்காட்சிகளை நடத்துகிறது. மேலும்பொதுவாக இந்தோனேசிய ஜவுளித் திருவிழா போன்ற வழக்கமான காட்சிகளையும் நடத்துகிறது. அவ்வாறு கண்காட்சிகளை நடத்த அது ஒத்துழைப்பினையும் பெறுகிறது. அவ்வாறான கண்காட்சிகள் நடத்தப்படுகின்ற சமயத்தில் கருத்தரங்கும் இணைந்து நடத்தப்படுகிறது. அத்துடன் குறுகிய ஜவுளித்துறை தொடர்பான கருப்பொருள் அமைந்த கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. இதைத தவிர பாரம்பரிய இந்தோனேசிய ஜவுளிகளின் பல்வேறு அம்சங்கள் குறித்த சிறப்பு கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளையும் இது நடத்துகிறது.[1]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]