ச. மனோகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச. மனோகரன் (பிறப்பு: அக்டோபர் 20, 1968) சிங்கப்பூரைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த இவர் அங்குள்ள டி.ஈ.எல்.சி. விடிவெள்ளி பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும், சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், திருச்சி, மண்டலப் பொறியியல் கல்லூரியில் இளம் பொறியியல் பட்டத்தினையும் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு புலமைவாய்ந்தவர். சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் மூன்றாண்டுகள் தொழில்நுட்ப அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

மலர் தமிழ் எனும் புனைப்பெயரில் 1977ல் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட மரபுக் கவிதைகளையும், புதுக்கவிதைகளையும் யாத்துள்ளார். இவரது ‘தாள்’ எனும் மரபுக் கவிதை கல்கியில் 1990ல் வெளிவந்தது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினராக உள்ளார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய மாதாந்த கவிதைக் கருத்தரங்கில் அன்னை தெரேசா மறைவு பற்றி இவர் எழுதிய ‘போய் வா அன்னையே’ எனும் இரங்கல் கவிதை சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வென்றது.

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._மனோகரன்&oldid=2713075" இலிருந்து மீள்விக்கப்பட்டது