சோழர் கால அடிமை முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடிமைகள்[தொகு]

கிரேக்க ரோமானிய நாடுகளில் பொருள்களின் தரத்திற்கேற்ப சந்தைகளில் விலை கூவி விற்பதைப் போன்று அடிமை மனிதர்கள் அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப விலைக் கூவி விற்கப்பட்டுள்ளனா. அதேபோன்று கி.பி.11-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழநாட்டில் அடிமைகள் விற்கப்பட்ட செய்தி பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அடிமைகளில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். வேளான் மகன், கல்தச்சன், தேவரடியார், இடைக்குடி மக்கள், நெல், குத்தும் பெண்கள், நந்தவனக் குடிகள், பறைக் கொட்டும் உவச்சர் ஆகியோர் அடிமைகளாக இருந்துள்ளனர்.

அடிமைகளாக ஆக்கப்பட்ட மக்களின் வகை[தொகு]

அடிமைகளாக ஆக்கப்பட்ட மக்களின் வகை15[தொகு]

 1. தாசியின் மக்கள்
 2. விலைக்கு வாங்கப்பட்டோர்
 3. கொடையாகப் பெறப்பட்டோர்
 4. பெற்றோரால் விற்கப்பட்டோர்
 5. வெள்ளளத்தின் போது பாதுகாக்கப்பட்டோர்
 6. பிரமாணத்தின் மூலம் அடிமையானோர்
 7. கடன் காரணமாக அடிமைப்பட்டோர்
 8. போரில் பிடிப்பட்டோர்
 9. சூதில் வெல்லப்பட்டோர்
 10. தாமே வழிய வந்து அடிமையானோர்
 11. வறுமையால் அடிமைப்பட்டோர்
 12. தன்னைத்தானே விற்றுக்கொண்டவர்கள்
 13. இறைவனுக்கு அடிமையானோர்
 14. அடிமைப் பெண்ணை திருமணம் செய்து அதன் வழி அடிமையானோர்
 15. குறிப்பிட்ட கால அடிமைகள்

இவ்வாறு பதினைந்து காரணங்களால் மக்கள் அடிமையாக்கப்பட்டனர். சமுதாயத்தில் இழிவானதாக கருதப்படும் பணிகளை இம்மக்களைக் கொண்டு செய்தனர். இவர்களை தாசர், தாசன், தாசி என்று மனு குறிப்பிடுகின்றது.

அடிமைகளின் பரிமாற்றம்[தொகு]

ஒன்று தன்னை தானே விற்றுக்கொள்ளுதல், இரண்டு தன் மனைவி மக்களையும் விற்றுக்கொள்ளுதல், மூன்று இனிவரும் சந்ததிகளையும் சேர்த்து அடிமையாக்குவதாக எழுதிக் கொடுத்து விற்றுக்கொள்ளுதல், ஒருவர் தம்முடைய அடிமைகளை தனிப்பட்ட ஒருவருக்கோ, கோயிலுக்கோ, மடத்திற்கோ விட்டுவிடுதல் அல்லது தானமாக அளித்தல் என்று பல வகைகளில் அடிமைகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

அடிமைகளின் விற்பனை[தொகு]

கி.பி.1201-ல் பஞ்சம் ஏற்பட்டபோது வாழ வழியின்றி வௌ;ளாளன் ஒருவன் தன்னையும், தன் மனைவியையும். துன் மக்களையும் 110 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளான். கி.பி.1219-ல் 5 பெண்களும், 5 ஆண்களும் வழிவழி அடிமையாக 1000 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளனா;. கி.பி.1210-ல் வௌ;ளாளன் ஒருவரும் அவன் மனைவியும் 110 காசுகளுக்கு மடத்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனா;. நாங்கூh; அந்தணன் ஒருவன் தன்னுடைய அடிமைகளில் பெண்கள் உட்பட 7 பேரை ஒருமுறையும் 15 பேரை மற்றொரு முறையும் விற்றுள்ளான். அத்துடன் 2 பெண்களும், 5 ஆண்களும் 30 காசுகளுக்கும் அடிமைகளாக விற்கப்பட்ட செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன

மேற்கோள்கள்[தொகு]

 1. இராசாராசன் துணூக்குகள் நூறு வெளியீடு தமிழ்நாடு தொல்லியல் துறை.
 2. பிற்காலச் சோழர் வரலாறு பக்கம் எண்:479,480. -தி.வை.சதாசிவ பண்டாரத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_கால_அடிமை_முறை&oldid=3007757" இருந்து மீள்விக்கப்பட்டது