உள்ளடக்கத்துக்குச் செல்

சோபா டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபா டே
பிறப்புசோபா ராஜாத்யாக்ச
7 சனவரி 1948 (1948-01-07) (அகவை 76)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தொழில்பத்திரிக்கையாளர், புதின ஆசிரியர், இதழாசிரியர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்புனித சேவியர் கல்லூரி, மும்பை
இணையதளம்
http://shobhaade.blogspot.com

சோபா டே (Shobhaa De, பிறப்பு: சனவரி 7, 1948) என்று பரவலாக அறியப்படும் சோபா ராஜாத்யாக்ச இந்திய ஆங்கில எழுத்தாளர். இவர் இதழ்களின் ஆசிரியராகவும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதுபவராகவும் புதின ஆசிரியராகவும் விளங்கி வருகிறார்[1].

பிறப்பு, படிப்பு, பணி:

[தொகு]

சோபா டே மும்பையில் பிறந்தார். மும்பையில் உள்ள அரசி மேரிப் பள்ளியிலும் புனித சேவியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். விளம்பர அழகியாகப் பணியைத் தொடங்கினார். பின்னர் பத்திரிக்கைத் துறையில் இறங்கினார். ஸ்டார் டஸ்ட், சொசைட்டி, செலப்ரிட்டி ஆகிய ஆங்கில இதழ்களின் ஆசிரியராகி தம் எழுத்துத் திறமையை வெளிப்படுத்தினார்[2]. மும்பை நகர வாழ்க்கை பற்றியும் எதிர்கொண்ட நண்பர்கள், திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள் எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் பற்றியும் நிறைய எழுதினார். டைம்சு ஆப் இந்தியா, ஆசியன் ஏஜ் ஆகிய ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய எழுத்து ஏராளமான வாசகர்களைக் கவர்ந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கதையும் வசனமும் எழுதியுள்ளார். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தம் அழுத்தமான கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும் திறம் படைத்தவர்.

பிற சிறப்புகள்:

[தொகு]
  • சோபா டே எழுதிய புத்தகங்கள் சில லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைத்துள்ளார்கள்.
  • 2007 இல் சண்டிகர் பல்கலைக் கழகத்தில் சமகால எழுத்துகளின் போக்கு என்னும் தலைப்பில் பேசினார்.
  • 2008 இல் பிரான்சில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றுக்கு இந்தியா சார்பில் சென்ற குழுவில் இடம் பெற்றார்.
  • மெல்போர்ன், ஆங்காங்கு சிங்கப்பூர் கராச்சி ஆகிய நகரங்களில் நடந்த இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டார்.
  • வலைப்பூ, டுவிட்டர் ஆகியவற்றிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். ஏறத்தாழ இருபது நூல்கள் இதுவரை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shobhaa De, Penguin script new chapter". The Times of India. 9 April 2010. http://timesofindia.indiatimes.com/business/india-business/Shobhaa-De-Penguin-script-new-chapter/articleshow/5775981.cms. பார்த்த நாள்: 9 September 2012. 
  2. "Bio-Bibliographical Information Biographical references". Archived from the original on 2009-10-27. பார்க்கப்பட்ட நாள் 2009-10-27.
  • "Selective Memory--Stories From My Life" by Shobhaa De"

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சோபா டே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபா_டே&oldid=3575319" இலிருந்து மீள்விக்கப்பட்டது