சோனு ஆனந்து சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனு ஆனந்து சர்மா
Sonu Anand Sharma
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு8 மார்ச்சு 1975 (1975-03-08) (அகவை 49)
புது தில்லி, தில்லி, இந்தியா
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
பெண்கள் இறகுப்பந்தாட்டம்
காது கேளாதோர் ஒலிம்பிக்கு
தங்கப் பதக்கம் – முதலிடம் கோபனேகன் 1997 கோடைகால ஒலிம்பிக்கு போட்டிகள் அணி பிரிவு

சோனு ஆனந்து சர்மா (Sonu Anand Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு காது கேளாத இறகுப்பந்தாட்ட வீரராவார்.[1] 1975 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1997 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை காது கேளாதோர் ஒலிம்பிக்கு போட்டியில் சோனு ஆனந்து சர்மா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தேசிய அளவிலான துடுப்பாட்ட வீரரான சோமேசு சர்மாவை இவர் திருமணம் செய்து கொண்டார். சோமியா சர்மா மற்றும் சக்சம் சர்மா என்ற இரு குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பன்னாட்டு மகளிர் தினத்துடனும், தற்செயலாக இவரது 46 ஆவது பிறந்தநாளில், நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது. தில்லி அரசு மற்றும் பெண்கள் சமூகத்திற்கான தில்லி ஆணையம் அமைப்புகள் இணைந்து சோனு ஆனந்து சர்மாவுக்கு இந்த கௌரவத்தை வழங்கின.[2] [3] தொடர்புடைய இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் காதுகேளாத பெண்மணி என்ற பெருமையையும் இவர் பெற்றார். [4]

தொழில்[தொகு]

சோனு ஆனந்து சர்மா 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியின் போது, காது கேளாதோர் ஒலிம்பிக்கில் அறிமுகமானார். மற்ற முக்கிய வீரர்களான ராசீவ் பாக்கா மற்றும் ரோகித் பாக்கர் ஆகியோரையும் உள்ளடக்கிய கலப்பு குழு போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். 2009 ஆம் ஆண்டு கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கமில்லாமல் போனார். [5] பன்னாட்டு மற்றும் உள்நாட்டு அளவில் பூப்பந்து விளையாடி ஓய்வு பெற்ற பிறகு, காது கேளாதோருக்கான பன்னாட்டு விளையாட்டுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சேர்ந்தார். [6] 2017 கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இறகுப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் இவர் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sonu Anand SHARMA". deaflympics.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-08.
  2. "International deaf and mute badminton player honoured by DCW - Times of India ►". 9 March 2019. https://timesofindia.indiatimes.com/city/delhi/all-india-sports-council-of-deaf-members-honored-by-dcw/articleshow/68321523.cms. 
  3. "Delhi Commission for Women celebrates grit, fortitude; honours 28".
  4. "Sonu Anand Sharma, 1st deaf women to win Delhi government's Nari Shakti Award, has proven everyone wrong". newzhook.com (in ஆங்கிலம்). 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-08.
  5. "Welcome to All India Sports of the Deaf". www.aiscd.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-08.
  6. "ICSD establishes Women in Sports Commission". www.ciss.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனு_ஆனந்து_சர்மா&oldid=3790943" இலிருந்து மீள்விக்கப்பட்டது