உள்ளடக்கத்துக்குச் செல்

சோதி விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதி விண்மீன்

சோதி விண்மீன் என்பது வட வானக்கோளத்தில் உள்ள லைரா விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஆல்பா லைரா விண்மீனாகும். இதன் வல ஏற்றம் 18 மணி 36 நிமிடம்; நடுவரை விலக்கம் +38°.46; இது வானத்தில் தோன்றும் ஒளிமிக்க வின்மீன்களில் நான்காம் விண்மீன். இதன் பார்வை அல்லது தோற்றப் பொலிவுப் பருமை 0.14. இதன் ஒளிர்மை 0.5. சோதி விண்மீன் சூரியனிலிருந்து 27 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது A நிறமாலை வகையைச் சார்ந்ததாகும். ஐந்தாம் ஒளிர்மை வகையைச் சார்ந்தது, சூரியனின் பொருண்மையைப் போல் மூன்று மடங்கு பொருண்மையுடையது. நீலம் கலந்த வெண்ணிறமுடையது. இதன் ஒளி சூரியனின் ஒளியைப் போல் 50 மடங்கு மிகுதி. இதன் விட்டம் 32 x 10 6 கி.மீ . புறப்பரப்பு வெப்பம் சூரியனின் வெப்பத்தைவிட இரு மடங்கானது. புவியின் சம இரவுப் புள்ளிகளின் தலையாட்டம் காரணமாக இவ்விண்மீன் 14000 ஆண்டுகளில் புவியின் துருவ விண்மீனாகத் தோன்றும் எனக் கருதப்படுகிறது.[1]

மேற்கோள்

[தொகு]
  1. "சோதி விண்மீன்". அறிவியல் களஞ்சியம் தாெகுதி 11. தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 12 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதி_விண்மீன்&oldid=3873970" இலிருந்து மீள்விக்கப்பட்டது