சோதனை மூலைமட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூலைமட்டம்

சோதனை மூலைமட்டம் அல்லது மூலைமட்டம் என்பது ஒரு மரத்துண்டு அல்லது உலோகதுண்டினால் ஆன ஒரு கருவி ஆகும். மரத்துண்டினை அளவிடப் பயன்படுத்தப்படும். இந்த கருவியின் ஆங்கிலப்பெயரிலுள்ள சதுரம் (ஆங்:Square) கருவியின் முதன்மைப் பயன்பாட்டை குறிக்கும். சதுரத்தின், செங்கோணத்தின் துல்லியத்தை (90 டிகிரி)யை அளவிடும்; ஒரு தளத்தின் மேற்பரப்பானது நேராக அல்லது அருகிலுள்ள மேற்பரப்புக்கு இணையாக உள்ளதா எனச் சரிபார்க்க உதவுகிறது.[1]

இது கட்டிட மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகிறது.[2] இது பாரம்பரியமாக எக்கினாலான பரந்த கத்தியை மரச்சட்டத்தினுள் பொருத்திவைத்து உருவாக்கப்படுகிறது. தேய்மானத்தினை தடுக்கும்வண்ணம் மரச்சட்டத்தின் உட்பகுதி பித்தளையினால் ஆக்கப்பட்டிருக்கும். நவீன மூலைமட்டமானது முழுவதுமாக உலோகத்தினால் செய்யப்பட்டிருக்கும்.[2]

சான்றுகள்[தொகு]

  1. Garrett, Hack; Sheldon, John S (1999). Classic Hand Tools. Newtown, CT: Taunton Press. பக். 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1561582735. 
  2. 2.0 2.1 http://www.technologystudent.com/equip1/try1.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதனை_மூலைமட்டம்&oldid=2750098" இருந்து மீள்விக்கப்பட்டது