சோட்டா பீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோட்டா பீம்
Chhota_Bheem.jpg
வேறு பெயர் குட்டி பீமன்
வகை நகைச்சுவை, அதிரடி
வடிவம் PAL
இயக்குனர் ராஜீவ் சுக்லா
நாடு இந்தியா
மொழி இந்திஆங்கிலம்
பருவங்கள் எண்ணிக்கை 4
மொத்த  அத்தியாயங்கள் 82
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) P.இரமேசு
ஒளிபரப்பு நேரம் 22 minutes
ஒளிபரப்பு
மூல அலைவரிசை போகோ
மூல ஓட்டம் 2008 – தற்போதைய
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்
தயாரிப்பாளர் வலைத்தளம்

சோட்டா பீம் (Chhota Bheem) என்பது போகோ தொலைக்காட்சியில்; ஒலிபரப்பப்படும் அடைபட (animated) நிகழ்ச்சி ஆகும். இத் தொடர் ராஜ் விசுவநாதா என்பவரால் துவங்கப்பட்டது. இக்கதையின் நாயகன் பீம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியச் சிற்றூரான தோலக்பூர் எனும் ஊரில் வசிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. சுட்கி எனும் சிறுமி, ராஜு எனும் சிறுவன் மற்றும் ஜக்கு எனும் குரங்கு ஆகியோர் பீமின் நண்பர்களாவர்.

லட்டு சாப்பிட்டதும் பீமின் ஆற்றல் அதிகரிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்‌ தொடரில் பேசப்படும் ஆங்கிலம் இந்திய ஆங்கிலமாக இருப்பதுடன் குழந்தைகளுக்கும் வெகு எளிதாகப் புரிகிறது. தோலக்பூரின் அரசர் இந்திரவர்மனும் அவரது மகள் இந்துமதியும் பீம் மீது முழு நம்பிக்கை உடையவர்கள்.

காலியா எனும் குண்டுப் பையனும் தோலக்பூரிலே வசிப்பவன். இவனுக்கு பீமின் புகழைக் கண்டு பொறாமை உண்டு. இவனது கூட்டாளிகள் போலு மற்றும் டோலு எனும் இரு சிறுவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டா_பீம்&oldid=1552514" இருந்து மீள்விக்கப்பட்டது