சோடியம் அம்மோனியம் டார்ட்டரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அம்மோனியம் டார்ட்டரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அம்மோனியம் ரோச்செல்லி உப்பு
இனங்காட்டிகள்
16828-01-6
ChemSpider 10667488
EC number 240-850-1
InChI
  • InChI=1S/C4H6O6.H3N.Na/c5-1(3(7)8)2(6)4(9)10;;/h1-2,5-6H,(H,7,8)(H,9,10);1H3;/q;;+1/p-1
    Key: QGKIJYBOYMJGHT-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21915779
SMILES
  • C(C(C(=O)[O-])O)(C(=O)[O-])O.[NH4+].[Na+]
பண்புகள்
C4H8NNaO6
வாய்ப்பாட்டு எடை 189.10 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் அம்மோனியம் டார்ட்டரேட்டு (Sodium ammonium tartrate) என்பது C4H8NNaO6 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். Na(NH4)[O2CCH(OH)CH(OH)CO2] என்று அமைப்பு வாய்பாட்டால் இதை குறிப்பிடுவர். அம்மோனியா மற்றும் சோடியம் ஐதராக்சைடுடன் டார்ட்டாரிக் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் சோடியம் அம்மோனியம் டார்ட்டரேட்டு உப்பு பெறப்படுகிறது. லூயிசு பாசுட்டர் சோடியம் அம்மோனியம் டார்ட்டரேட்டின் நான்குநீரேற்று ஆடி எதிருரு படிகங்களை தன்னிச்சையான ஆடிஎதிருரு கூறாக்கம் மூலம் பெற்றார்.[1] இவரது கண்டுபிடிப்பு ஒளியியல் செயல்பாடு பற்றிய ஆய்வுக்கு வழிவகுத்தது. இறுதியில் பரந்த தாக்கங்களைக் கொண்டதாகவும் காட்டப்பட்டது.[2] இந்த உப்பின் பல மாற்றங்கள் எக்சுகதிர் படிகவியல் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சுழிமாய்க் கலவை உட்பட, இது ஒற்றை நீரேற்றாக படிகமாகிறது.[3]

தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]

NaKO2CCH(OH)CH(OH)CO2(H2O)4 என்ற வாய்பாட்டைக் கொண்ட பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டு என்ற பெர்ரோமின் வேதிப்பொருள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ரோச்செல்லி உப்பு என்றழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. L. Pasteur (1849). "Nouvelles recherches de L. Pasteur sur les relations qui peuvent exister entre la forme cristalline, la composition chimique et le phénomène de la polarisation rotatoire". Compt. Rend. 28: 477. 
  2. Brożek, Z.; Mucha, D.; Stadnicka, K. (1994). "X-ray Rietveld structure determination of ammonium Rochelle salt at 120 (Paraelectric phase) and 100 K (Ferroelectric phase)". Acta Crystallographica Section B Structural Science 50 (4): 465–472. doi:10.1107/S0108768194000479. 
  3. Kuroda, Reiko; Mason, Stephen F. (1981). "Crystal structures of dextrorotatory and racemic sodium ammonium tartrate". Journal of the Chemical Society, Dalton Transactions (6): 1268. doi:10.1039/DT9810001268.