சோசரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோசரி
உருவாக்குனர்இன்கிள் ஸ்டூடியோ [1]
இயக்கு முறைமைஐஓஎஸ்
இணையத்தளம்inklestudios.com/sorcery

சோசரி (Sorcery) எனப்படுவது ஐஓஎஸ் இயங்குதளங்களில் இயங்கக்கூடிய ஒரு கணனி விளையாட்டாகும். கதை சொல்லும் பாணியில் அமைந்த இந்த விளையாட்டு 2013ம் ஆண்டின் ஒரு சிறந்த விளையாட்டாக மாசபிள் இணையத்தளம் அறிவித்தது[2]. ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த கணனி விளையாட்டு வடிவமைப்பாளர் ஸ்டீவ் ஜக்சன் மற்றும் இன்கிள் எனும் நிறுவனங்கள் இணைந்து இந்த கணனி விளையாட்டை ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வெளியிட்டனர்.

விளையாட்டு முறை[தொகு]

அரசகாலத்தில் நடப்பது போன்ற கதை இந்த விளையாட்டிலே இடம்பெற்றுள்ளது. ஒரு வீரன் தனது ஊரில் இருந்து ஒரு கிரீடத்தை மீட்பதற்காக நீண்ட பயணத்தை ஆரம்பிக்கின்றான். இவன் போகும் வழியில் ஏற்படும் தடங்கல்கள் முடிவுகள் போன்றவற்றை வீரன் சார்பாக விளையாட்டை விளையாடுபவர் எடுக்க வேண்டும். விளையாட்டை விளையாடுபவர் எடுக்கும் முடிவிற்கு ஏற்ப விளையாட்டை தொடரும் அல்லது முடித்துக்கொள்ளும் நிலை ஏற்படும்.

பாகம் இரண்டு[தொகு]

பாகம் ஒன்றின் வெற்றியைத் தொடர்ந்து பாகம் இரண்டும் வெளியிடப்பட்டு வைக்கபட்டது. பாகம் இரண்டு தற்போது ஐடியூன்ஸில் பதிவிறக்கிக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளது[3].

பாகம் ஒன்றின் கதை முடியும் இடத்தில் இருந்து பாகம் இரண்டின் கதை ஆரம்பிக்கின்றது. பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவை இரண்டு செயலிகள் என்ற காரணத்தால் பாகம் ஒன்றில் விளையாடி முடிக்கும் போது சேமித்த பண்டங்கள் முதலியவற்றை பாகம் இரண்டிற்கு மாற்றக்கூடிய வசதியை செயலியில் வழங்கியுள்ளார்கள். அதாவது பாகம் ஒன்றின் முடிவில் பயனர் விரும்பினால் ஒரு இரகசியக்குறியீட்டைக் உருவாக்கிக்கொள்ளலாம். இந்த இரகசியக்குறியீடு ஒவ்வொரு பயனருக்கும் தனித்துவமானது என்பதுடன் இதில் பயனர் விளையாட்டு விபரங்களும் சேமிக்கப்பட்டிருக்கும். மேகக்கணிமைமூலம் விபரங்கள் சேமிக்கப்பட்டிருப்பதனால் பாகம் இரண்டு ஆரம்பிக்கும்போது பாகம் ஒன்றின் குறியீட்டைக் கொடுத்து அங்கிருக்கும் தரவுகளை இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

பாகம் மூன்று மற்றும் நான்கு எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் கருவிகளுக்கும் இந்த விளையாட்டு எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

  1. Steve Jackson’s Sorcery! for iPad and iPhone
  2. "The 10 Best Mobile Games of 2013". மாசபிள். 12 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2013.
  3. "Sorcery! 2 by Inkle". பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசரி&oldid=3397776" இலிருந்து மீள்விக்கப்பட்டது