சொக்கறை
Appearance
| |
---|---|
உடற்கூற்றியல் |
சொக்கறை (dimple அல்லது gelasin)[1] என்பது மாந்தர் உடம்புத் தசையிலே குறிப்பாகக் கன்னத்திலோ தாழ்வாய்க்கட்டையிலோ (முகவாய், நாடி) இயற்கையாகவே உண்டாகும் ஒருவகைக் குழியாகும்.
ஏற்கெனவே ஒருவர்க்கு இருக்கும் கன்னச் சொக்கறையானது அவர் புன்முறுவல் பூப்புப் போன்ற முகக் குறிப்பினைச் செய்யும்பொழுது விளங்கித்தோன்றும்; ஆனால் தாழ்வாய்க்கட்டைச் சொக்கறையோ எந்தக் குறிப்பிட்ட முகக்குறிப்பும் இன்றியே எந்நேரமும் ஒரு சிறுகோடுபோல நிலைத்துத் தோன்றும். சொக்கறை நெடுங்காலப் போக்கிற் கவனித்தால் தோன்றும் மறையும்;[2] பச்சிளங் குழந்தைக்குப் பிறப்பிலே தோன்றிய சொக்கறை அது வளரவளரக் குழந்தைக் கொழுப்புக் குன்றி மறைந்துவிடுவதுண்டு.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Garg, Anu. "A.Word.A.Day". Wordsmith. பார்க்கப்பட்ட நாள் 2013-08-12.
- ↑ Wiedemann Hans-Rudolf (July 1990). "Cheek Dimples". American Journal of Medical Genetics 36 (3): 376–376. doi:10.1002/ajmg.1320360337.
- ↑ "Are facial dimples determined by genetics?". Genetics Home Reference. U. S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் April 24, 2019.