சைவ சித்தாந்த வினா விடை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைவ சித்தாந்த வினா விடை
நூல் பெயர்:சைவ சித்தாந்த வினா விடை
ஆசிரியர்(கள்):கலாநிதி. க. கணேசலிங்கம்
வகை:தமிழ்
துறை:இந்து சமயம், ஆன்மிகம்
இடம்:செ.ரா.சோபனா,
45, மசூதி தெரு,
சேப்பாக்கம்,
சென்னை 600 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:120
பதிப்பகர்:செ.ரா.சோபனா
பதிப்பு:சூலை 2005.

சைவ சித்தாந்த வினா விடை எனும் இந்த நூல் 120 பக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

இலங்கையைச் சேர்ந்த சைவசித்தாந்த கலாநிதி க. கணேசலிங்கம் என்பவர் இந்நூலின் ஆசிரியராவார்.

அருள் வாழ்த்துரை[தொகு]

இந்நூலுக்கு திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 23 வது குருமகா சன்னிதானம் சீர்- வளர் -சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

வாழ்த்துரை[தொகு]

இலண்டனில் உள்ள உலக சைவப் பேரவையின் இலண்டன் மெய்கண்டார் ஆதீனம் மூலம் யோகானந்த அடிகள் (பி. எசு. பற்குணராசா) இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

அறிமுகம்[தொகு]

இலங்கை, யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த பண்டிதர் கலாநிதி மு. கந்தையா இந்நூலுக்கு அறிமுகம் தந்திருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

இந்நூலில் சைவ சமயம் குறித்த பல்வேறு தகவல்கள் சைவ சித்தாந்தம், கடவுள், உயிர், ஆணவம், கன்மம் அல்லது வினை, மாயை, தத்துவங்களின் தோற்றமும் செயற்பாடும், சிவனின் அருட்டிருமேனி, இறை உயிர் உறவு, பந்தமும் வீடும், திருவைந்தெழுத்து, ஞானச்செயல், சைவசித்தாந்த நூல்கள், சில விளக்கங்கள் எனும் தலைப்புகளில் கேள்வி - பதில் வடிவில் தரப்பட்டுள்ளன.