சையத் அசீசு பாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சையத் அசீசு பாசா (Syed Azeez Pasha) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த இவர் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2]

2013 ஆம் ஆண்டு அகில இந்திய தன்சீம்-இ-இன்சாஃப் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்து பணியாற்றி வருகிறார். [3] தற்போது இந்திய பொதுவுடமைக் கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார். [4] [5] [6]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சையத் அசீசு பாசா கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் உள்ள அம்னாபாத்தில் சையத் யாசீன் பாசா மற்றும் சையதா பத்தூல் பீ தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் சட்டப் பாடத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சையத் அசீசு பாசா 1972 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் தேதியன்று சையதா தௌலத் பாத்திமா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Syed Azeez Pasha | PRSIndia" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  2. "Syed Aziz Pasha - National Portrait Gallery" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  3. "Syed Aziz Pasha re-elected president of AITI" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  4. "CPI vows to send fascist PM Modi home" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  5. "सैयद अज़ीज़ पाशा चुने गए भाकपा के राष्ट्रीय सचिव" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  6. "Syed Azeez Pasha elected as CPI national secretary" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_அசீசு_பாசா&oldid=3824064" இலிருந்து மீள்விக்கப்பட்டது