சைக்காலஜி டுடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைக்காலஜி டுடே என்பது அமெரிக்காவில் வெளிவரும் ஆங்கில இரு மாத ஒரு முறை இதழ் ஆகும். சிக்காகோ பல்கலைக் கழகத்தில் படித்து ஆய்வுப் பட்டம் பெற்ற நிக்கலஸ் சார்னி என்பவர் இந்த இதழை 1967 மே மாதம் முதல் ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியிட்டார்.[1]

மனிதர்களின் நடத்தை இயல்புகள், நரம்பியல், பாலியல் பெற்றோர்களின் கவலை, குழந்தை வளர்ப்பு முறைகள் போன்ற பல்வேறு உளவியல் தொடர்பான கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெறுகின்றன.[2]

பல்வேறு உளவியல் நிபுணர்கள், மன நோயியல் மருத்துவர்கள் மாந்தவியல் அறிஞர்கள், சமூகவியலாளர்கள், அறிவியல் இதழாளர்கள் இந்த சைக்காலாஜி டுடே இதழில் கட்டுரைகள் எழுதினார்கள். இதன் தற்போதைய முதன்மை ஆசிரியர் கஜா பெரினா என்னும் பெண்மணி ஆவார்.[3]

மேற்கோள்[தொகு]

  1. Bruce V. Lewenstein (1987). "Was There Really a Popular Science" Boom"?". Science, Technology, & Human values. https://www.researchgate.net/profile/Bruce_Lewenstein/publication/231582087_Was_There_Really_a_Popular_Science_'Boom'/links/0deec516d302b245f0000000.pdf. பார்த்த நாள்: 24 June 2016. 
  2. "Psychology Today". Encyclopædia Britannica. (2013). 
  3. Perina, Kaja. "Psychology Today: Experts". Psychology Today. Sussex Publishers, LLC. பார்த்த நாள் 27 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்காலஜி_டுடே&oldid=2749080" இருந்து மீள்விக்கப்பட்டது