செ. யோகராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செ. யோகராசா
பிறப்பு(1949-12-17)திசம்பர் 17, 1949
கரணவாய், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்புதிசம்பர் 7, 2023(2023-12-07) (அகவை 73)
மகரகமை, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்கருணையோகன்
கல்வியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (முதுகலை, கலாநிதி), கொழும்புப் பல்கலைக்கழகம் (இளங்கலை), நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், கரணவாய் வித்தியாலயம்
பணிபேராசிரியர்
பணியகம்கிழக்குப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபேராசிரியர், எழுத்தாளர்
பெற்றோர்செல்லையா, இலட்சுமி
வாழ்க்கைத்
துணை
விஜயதிலகி
பிள்ளைகள்சுவாசுதிக்கா

செ. யோகராசா (17 திசம்பர் 1949 – 7 திசம்பர் 2023) இலங்கையைச் சேர்ந்த மொழித்துறைப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கருணையோகன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யோகராசா 1949 திசம்பர் 17 இல் யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி, கரணவாய் என்னும் ஊரில் செல்லையா, இலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை நெல்லியடி, மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்று, பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1971 இல் தமிழில் இளங்கலை சிறப்புப் பட்டத்தையும், 1972 இல் இளமெய்யியல் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1984 இல் கல்வி திப்புளோமா பட்டத்தையும், 1990 இல் முதுகலைப் பட்டத்தையும், 1999-இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2]

தொழில்[தொகு]

1972 முதல் பல்வேறு இடங்களில் அஞ்சலக முகாமையாளராகப் பணியாற்றிய யோகராசா 1976-இல் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.[2] 1991 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் விரிவுரையாளராக இணைந்து, 2009 இல் பேராசிரியரானார்.[2] நவீன தமிழ் இலக்கியம், தமிழியல் ஆய்வு, ஈழத்து இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்கள் இலக்கியம், நாட்டாரியல், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • தேசிய சாகித்திய விருது (2007, ஈழத்து நவீன கவிதை நூலிற்காக)[1][2]

எழுதிய நூல்கள்[தொகு]

  • ஈழத்துத் தமிழ் நாவல் வளமும், வளர்ச்சியும்
  • இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்
  • ஈழத்து நவீன கவிதை
  • ஈழத்து முச்சந்தி இலக்கியம்
  • ஈழத்து இலக்கியமும் இதழியலும்
  • பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

தொகுப்பு நூல்கள்[தொகு]

  • ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு
  • மாற்று நோக்கில் சில கருத்துகளும் நிகழ்வுகளும்
  • புதுத்துளை நூறு (பயிற்சிப் பட்டறைக் கவிதைகள்)
  • ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
  • ஈழத்துச் சிறுவர் அறிவியல் பாடல்கள்
  • ஈழத்துச் சிறுவர் பாடல் களஞ்சியம்

இறப்பு[தொகு]

  • செ. யோகராசா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 73-ஆவது அகவையில் 2023 திசம்பர் 7 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
செ. யோகராசா எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 வடமராட்சியில் உதித்து கிழக்கில் பிரகாசித்த செ. யோகராசா, ஐங்கரன் விக்னேசுவரா
  2. 2.0 2.1 2.2 2.3 "பேராசிரியர் செ. யோகராசா பற்றிய சிறு தகவல்கள்". ஜீவநதி. No. 204. யாழ்ப்பாணம். June 2023. p. 44.
  3. பேராசிரியர் யோகராசா நேற்று காலமானார், தினகரன், 8 திசம்பர் 2023
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._யோகராசா&oldid=3842170" இலிருந்து மீள்விக்கப்பட்டது