செ. கணேசலிங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செ. கணேசலிங்கன்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிபதிப்பாளர்
அறியப்படுவதுஎழுத்தாளர், பதிப்பாளர்

செ. கணேசலிங்கன் ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை தந்தவர். நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளில் மட்டுமல்லாது சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் பெருமளவு எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். குமரன் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பெருமளவு தரமான நூல்களைப் பதிப்புத்துள்ளார். 1971இல் குமரன் என்ற மாத இதழை ஆரம்பித்து பொதுவுடமைக் கருத்துக்களுக்கான களமாக அதனை சில ஆண்டுகள் வெளியிட்டுள்ளார்.

எழுத்துலகில்

நீண்ட பயணம் செ. கணேசலிங்கன் எழுதிய முதல் புதினமாகும். இது ஈழத்துப் புதினங்களில் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இதன் முதற் பதிப்பு 1965 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இரண்டாவதாக எழுதிய புதினம் சடங்கு மூன்றாவதாக எழுதிய புதினம் செவ்வானம் (1967). இம்மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த ஒரே பிராந்தியத்தை, யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்ட புதினங்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிடுகிறார்.[1]

செ. கணேசலிங்கன் "குமரன்" இதழில் எழுதிய குமரனுக்கு எழுதிய கடிதங்கள் பலரினதும் வரவேற்பைப் பெற்றது. இது நூலாகவும் வெளிவந்தது.

இவருடைய ஆக்கங்கள்

நாவல்கள்

  • நீ ஒரு பெண்
  • வன்முறை வடுக்கள்
  • ஒரு மண்ணின் கதை
  • மரணத்தின் நிழலில்
  • இரண்டாவது சாதி
  • ஒரு பெண்ணின் கதை
  • விலங்கில்லா அடிமைகள்
  • சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
  • பொய்மையின் நிழலில்
  • அயலவர்கள்
  • புதிய சந்தையில்
  • அந்நிய மனிதர்கள்
  • வதையின் கதை
  • மண்ணும் மக்களும்
  • போர்க்கோலம்
  • நீண்ட பயணம்
  • சடங்கு
  • செவ்வானம்
  • செல்வி
  • நான்கு சுவர்களுக்குள்
  • போட்டி சந்தையில்
  • இலட்சிக் கனவுகள்
  • குடும்பசிறையில்
  • அடைப்புகள்
  • கவர்ச்சிக் கலையின் மறுபக்கம்
  • ஓர் அரசியலின் கதை
  • ஈனத்தொழில் (நாவல், குமரன் வெளியீடு, 1997)
  • திரும்பி பார்க்கிறேன்
  • நகரமும் சொர்க்கமும்
  • கைலாசபதி நினைவுகள்
  • தரையும் தாரகையும்
  • தாய் வீடு
  • கூட்டுக்கு வெளியே
  • சிறையும் குடிசையும்
  • கோடையும் பனியும்
  • தேன் பறிப்போர்
  • இருட்றையில் -உலகம்
  • இருமுகம்
  • அபலையின் கடிதம்
  • கிழக்கும் மேற்கும்
  • இரு நண்பர்கள்

சிறுகதைகள்

  • செ. கணேசலிங்கனின் சிறுகதைகள்
  • நல்லவன்
  • ஒரே இனம்
  • சங்கமம் (1962)

சிறுவர் இலக்கியம்

  • சிந்தனைக் கதைகள்
  • உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள்
  • உலகச் சமயங்கள்
  • உலக அதிசயங்கள்

ஏனையவை

  • அறிவுக் கடிதங்கள்
  • குந்தவிக்குக் கடிதங்கள்
  • மான்விழிக்குக் கடிதங்கள்
  • கௌடாலியரின் (சாணக்கியன்) அர்த்த சாத்திரமும் வள்ளுவரின் திருக்குறளும்
  • மக்கியாவலியும் வள்ளுவரும்
  • பகவத்கீதையும் திருக்குறளும்
  • உலக அதிசயங்கள்
  • கலையும் சமுதாயமும்
  • மு.வ. நினைவுகள்
  • உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள்
  • நவீனத்துவமும் தமிழகமும்
  • கலையும் சமுதாயமும்
  • உலகச் சமயங்கள்
  • பெண்ணடிமை தீர
  • பெண்ணியப் பார்வையில் திருக்குறள்
  • சிக்மன் பிராயடின் கனவுகளின் விளக்கம்
  • திருவள்ளுவரும் சிக்மன் பிராய்டும்
  • பல் சுவைக் கட்டுரைகள்
  • சில பயணக் குறிப்புகள்

விருதுகள்

  • ‘நீண்டபயணம்’ நாவல் சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
  • ‘மரணத்தின் நிழலில்’ சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._கணேசலிங்கன்&oldid=1566632" இலிருந்து மீள்விக்கப்பட்டது