உள்ளடக்கத்துக்குச் செல்

செல்லுலோஸ் அசிட்டேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்லுலோஸ் அசிட்டேட் (Cellulose acetate) என்பது ஒருவகை செயற்கை இழையாகும். இது 'இயற்கை உயிர்மம்’ என்று கூறப்படும் செல்லுலோஸிலிருந்து உருவாக்கப்படுகிறது. இதனை ‘அசிட்டேட் ரேயான்’ என்று அழைப்பதும் உண்டு. மென்மையான மரக்கூழுடன் குட்டை இழைப்பருத்தியையும் அத்துடன் அசெட்டிக் அமிலத்தையும் கலந்து வினைபுரியச் செய்வர். இதன்மூலம் செல்லுலோஸ் 'அசெட்டேட்’ எனும் புதிய சேர்மப்பொருள் கிடைக்கும். இதிலிருந்து செயற்கை இழை உருவாக்கப்படுகிறது. இவ்விதம் பெறப்பட்ட விளைபொருள் 'செலினேஸ் பட்டு' என அழைக்கப்படுகிறது. இந்த இழை நைலான் இழையைவிட வலுக் குறைந்ததாகும். இவ்விழையைக் கொண்டு ஆடை நெய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான சேலைகள் அதிகம் நெய்யப் பயன்படுத்தப்படுகிறது. இது விலை மலிவானதாகும்.

அசிட்டேட் இழை ஆடைகள் பளபளப்பானவை. ஆனால், இவற்றை சலவைப் பெட்டி கொண்டு தேய்த்தால் இழை உருகி விடும். புகைபோன்றவை பட்டால் இதன் நிறம் மங்கிவிடும்.

செல்லுலோஸ் அசிட்டேட்டைக் கொண்டு சலவைப்பெட்டியின் மேல்கைப்பிடி, மூக்குக் கண்ணாடிச் சட்டம், பேனா போன்றவை செய்யப்படுகின்றன.[1]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லுலோஸ்_அசிட்டேட்&oldid=3049479" இலிருந்து மீள்விக்கப்பட்டது