உள்ளடக்கத்துக்குச் செல்

செரில் சாண்டுபெர்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரில் சாண்டுபெர்கு
பிறப்பு28 ஆகத்து 1969 (அகவை 54)
வாசிங்டன்
படித்த இடங்கள்
  • Harvard College
  • Harvard Business School
  • North Miami Beach High School
பணிகணினி விஞ்ஞானி, தொழில் முனைவோர்
வேலை வழங்குபவர்
வாழ்க்கைத்
துணை/கள்
Dave Goldberg
கையெழுத்து

செரில் காரா சாண்டுபெர்கு (/ˈsændbərɡ/; பிறப்பு ஆகத்து 28, 1969),[1] ஓர் அமெரிக்க நுட்ப நிருவாகியும் செயற்பாட்டாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் முகநூல் நிறுவனத்தின் முதன்மைச் செயற்பாட்டு அலுவலரும் லீன்இன்.ஆர்கு ( அல்லது லீன் இன் அறக்கட்டளை) தளத்தின் நிறுவனரும் ஆவார். சூன் 2012 இல், முகநூலின் இயக்குநர்கள் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு முகநூல் இயக்குநர் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே. முகநூலில் சேரும் முன்னர் கூகுளின் உலகளாவிய இணைய விற்பனை மற்றும் செயற்பாடுகள் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். கூகுளின் இலாப நோக்கற்ற  கூகுள்.ஆர்கு சேவை அமைப்பை உருவாக்குவதிலும் பங்காற்றினார். கூகுளில் பணியாற்றுவதற்கு முன்பு ஐக்கிய அமெரிக்க கருவூலச் செயலாளரான இலாரன்சு சம்மர்சின் முதன்மை அலுவலராகவும் இருந்தார்.

2012 இல், தைம் இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் 100 செல்வாக்கு மிக்கோர் பட்டியலில் இடம்பெற்றார்.[2] சூன் 2015 நிலவரப்படி, முகநூல் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள அவரது பங்குகளின் மதிப்பு அடிப்படையில், செரில் அமெரிக்க தாலர் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பு மிக்கவராக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரில்_சாண்டுபெர்கு&oldid=3448058" இலிருந்து மீள்விக்கப்பட்டது