செயற்கை நிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயற்கை நிலா ஒன்றை 2020 ஆம் ஆண்டிற்குள் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. மின் சிக்கன நடவடிக்கைக்காகவும், தெருவிளக்குகளுக்கு மாற்றாகவும் சீனா இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பொதுவாக, செயற்கைக்கோளே செயற்கை நிலா என்று அழைக்கப்படுவதுண்டு. இத்திட்டத்திற்காக, சிச்சுவான் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள செங்டு நகரில் ஒளிரும் செயற்கைக் கோள் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த செயற்கைக் கோள், 2020 ஆம் ஆண்டில், சிச்சுவானில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் செயற்கைக் கோள் நிலாவை விட 8 மடங்கு அதிகம் ஒளிரக்கூடிய சக்தி உடையதாக இருக்கும். இந்த செயற்கைக்கோளால், 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு வெளிச்சம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.[1][2]

திட்டம்[தொகு]

சீனாவின் இந்த முதலாவது செயற்கைக் கோள் நிலா முயற்சி வெற்றி பெறும் நேர்வில் 2022 ஆம் ஆண்டு வாக்கில், மேலும், மூன்று செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், தியான் ஃபு நியூ ஏரியா சொசைட்டி எனும் அமைப்பால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக, வு சுன்ஃபெங் உள்ளார். இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட நிலா பூமியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[3]

மின் சிக்கனம்[தொகு]

இவ்வாறு நிறுவப்படும் செயற்கைக் கோள்கள் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்க இருப்பதால் நகர்ப்புறங்களில் தெருவிளக்குகளின் மின்சாரத்திற்காக செலவழிக்கப்படும் தொகையைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்டு நகரானது சுமார் 14 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். செங்டு நகருக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கத் தொடங்கி விட்டால் 170 மில்லியன் டாலர்கள் மின்சார செலவு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[4] [5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=2126971
  2. https://timesofindia.indiatimes.com/world/china/china-to-launch-artificial-moon-to-replace-streetlamps/articleshow/66282929.cms
  3. https://www.news18.com/news/world/china-to-launch-three-artificial-moons-bright-enough-to-replace-streetlights-by-2020-1913347.html
  4. https://timesofindia.indiatimes.com/world/china/china-to-launch-artificial-moon-to-replace-streetlamps/articleshow/66282929.cms
  5. https://www.news18.com/news/world/china-to-launch-three-artificial-moons-bright-enough-to-replace-streetlights-by-2020-1913347.html
  6. https://www.telegraph.co.uk/technology/2018/10/17/china-launch-artificial-moon-orbit-light-city/
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_நிலா&oldid=2589756" இலிருந்து மீள்விக்கப்பட்டது