செயற்கை சுவாசக் கருவி
Jump to navigation
Jump to search
செயற்கை சுவாசக் கருவி | |
---|---|
![]() The Bird VIP Infant ventilator | |
செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) என்பது நுரையீரலுக்கு சுவாசிக்கக்கூடிய காற்றை உள்ளே அனுப்பவோ, வெளியே அனுப்பவோ உதவுகிறது, இதன் மூலம் உடல் ரீதியாக சுவாசிக்க முடியாத ஒரு நோயாளிக்கு செயற்கையாக இயந்திர காற்றோட்டத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட இயந்திரமாகும். நவீன செயற்கை சுவாசக் கருவிகள் கணினிமயமாக்கப்பட்ட நுண்செயலி கட்டுப்பாட்டு இயந்திரங்களாக இருக்கிறது, நோயாளிகளுக்கு எளிய, கையால் இயக்கப்படும் பை வால்வு முகமூடி உதவியுடனும் செயற்கையாக சுவாசக்காற்றோட்டம் செய்யலாம். வென்டிலேட்டர்கள் முக்கியமாக தீவிர சிகிச்சை மருத்துவம், வீட்டு பராமரிப்பு மற்றும் அவசரகால மருத்துவம் (முழுமையான அலகுகளாக) மற்றும் மயக்க மருந்து ( மயக்க மருந்து இயந்திரத்தின் ஒரு அங்கமாக) சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.