உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கை கண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண் குழிகளில் பொருத்தப்படும் பழுப்பு நிற செயற்கை கண்

செயற்கை கண், (Ocular prosthesis) கண்ணை அகற்றியவர்களின் கண் குழிகளில் செயற்கை கண் பொருத்தப்படும். நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கக்கூடிய, உயர் தர அக்ரலிக் பொருளால் செயற்கை கண் உருவாக்கப்படுகிறது. கண் குழிகளுக்கு ஏற்ற வகையில் அளவு எடுத்து சிறப்பாகத் தயாரிக்கப்படும் செயற்கை கண்களும் உள்ளது. செயற்கை கண்களால் பார்வை அளிக்க முடியாது. முகத்தை இயல்பான தோற்றத்தில் வைத்திருக்கவே செயற்கை கண்கள் பொருத்தப்படுகிறது. கண்களில் புற்றுநோய் தீவிரமடைந்திருந்தாலோ, கண்களில் பலமாக அடிபட்டிருந்தாலோ, கண்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். கண்களில் தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, கண் நீர் அழுத்தம் தீவிரமடைந்திருந்தாலோ சிலருக்கு செயற்கை கண் பொருத்தும் நிலை ஏற்படும்.[1]

பராமரிக்கும் முறைகள்[தொகு]

சுத்தமான தண்ணீரைக் கொண்டு செயற்கை கண்ணை சுத்தம் செய்ய வேண்டும். கண்கள் வறண்டுவிடாமல் தடுக்க, காலை, மாலை என இரு வேளைகளிலும் சொட்டு மருந்து போட வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒருமுறை செயற்கைக் கண்களை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை, செயற்கை கண்ணில் தேங்கியுள்ள உப்பை நீக்கவும், சிறிய அளவில் கீறல்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்கவும் பாலிஷ் செய்யப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_கண்&oldid=3852220" இலிருந்து மீள்விக்கப்பட்டது