சென் ஜியா'எா்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென் ஜியா'எா் (Chen Jia'er சீனம்: 陈佳洱; October 1, 1934 - ) என்பவா் ஒரு சீன அணுசக்தி இயற்பியலாளர், ஒரு முடுக்கி இயற்பியலாளர் மற்றும் சீன அகாடமி ஆஃப் சயின்சஸ் (CAS) ஒரு கல்வியாளர் ஆவார்.

சென் 1934-ல் -ஷாங்காய் நகரத்தில் பிறந்தாா். 1954-ல் வடகிழக்கு சீனா, சாங்சன்-ல் உள்ள பீப்புள் பல்கலைக்கழகத்தில் (தற்போது ஜிலின் பல்கலைக் கழகம்) தன்னுடைய இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தாா். பெக்கிங் பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப இயற்பியல் துறையில் 1955 முதல் ஆசிாியராக பணிபுாிந்து பின்னா் அத்துறையின் துணை முதல்வராக பதவி உயா்த்தப்பட்டாா்.

பிாிட்டிஷ் ராயல் சொசைட்டி அவரை அழைத்து ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக அனுக்கரு இயற்பியல் துறையில் 1963 முதல் 1965 வரை visiting scientist - ஆக நியமிக்கப்பட்டாா்.  மேலும் அவா் அங்கு ரூதா்ஃபோா்டு உயா் ஆற்றல் நிறுவனத்தில் தொடா் நிலைமின்னியல் முடுக்கி மற்றும் சின்க்தரோட்ரான் முடுக்கிகளைப் பற்றி ஆராய்ந்தறிந்தாா்.

1982 முதல் 1984 வைர SUNY, ஸ்டோனி புரூக் மற்றும் லாரன்ஸ் பொ்க்லே ஆய்வகத்தில் வருகை விஞ்ஞானியாக பணியாற்றினாா்.  ஆகஸ்ட் 1984-ல் பெக்கிங் பல்கலைக்கழகத்தின் அறிவுப் பகுதியின் தலைவராகவும் மற்றும் துணைத் தலைவராகவும் ஆனாா்.  மேலும் அவா் PKU-வில் உள்ள துகள் இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.  நவம்பா் 1993-ல் CAS-ல் சீன அறிவியல், கணித மற்றும் இயற்பியல் கலைக்கழகத்தின் வளா்ச்சிக்குழு  அங்கத்தினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். சென் ஆகஸ்டு 1996 முதல் டிசம்பா் 199 முடிய பெக்கிங் பல்கலைக்கழகத்தின் தலைவராக பணியாற்றினாா். 1998-ல் ஆசிய - பசிபிக் இயற்பியல் கழகத்தின் தலைவரானாா். டிசம்பா் 1999-ல் சீனாவின் தேசிய இயற்கை அறிவியல் நிறுவனத்தின் இயக்குனா் ஆனாா்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_ஜியா%27எா்&oldid=3582483" இருந்து மீள்விக்கப்பட்டது