சென்னியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னியர் குடிமக்கள் கடவுள் சிலைகளுக்கு முன்னர் யாழிசை கூட்டிப் பாடுவர். (பொருள் தேடச் சென்ற தன் தலைவன், சென்னியர் கூட்டும் யாழிசை போல ஊதும் குருகில் இசை எழுப்பிக்கொண்டு கங்கையாற்று மூடாக்குப் படகில் சென்றுகொண்டிருப்பானோ என ஒரு தலைவி எண்ணுகிறாள்) [1]

மூவேந்தர்
சென்னியர் என்பது தலையில் பூச் சூடிய மூவேந்தரையும் குறிக்கும் பொதுச்சொல்.[2]
சோழர்
இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னர் பெரும்பூண் சோழர் தம் வேல்களைக் கிடத்திப் பணிந்தமையால் இந்தப் பொறையன் ‘சென்னியர் பெருமான்’ எனப் போற்றப்படுகிறான்.[3]
பூச் சூடும் ஆடவர்
பூச் சூடும் தலையுடையாரைச் சென்னியர் என்பது வழக்கம்.[4]
தலையில் பூச் சூடிக்கொள்ளும் ஆடவரைச் ‘சென்னியர்’ என்றனர்.[5]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. சென்னியர் தெறல் அருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ் நரம்பு இசைத்து அன்ன, தீங்குரல் குருகின் கங்கை வங்கம் போகுவர் கொல்லோ - நற்றிணை 189
  2. வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும், தலைந்த சென்னியர், அணிந்த வில்லர், கொற்ற வேந்தர் - புறநானூறு 338
  3. பதிற்றுப்பத்து 85
  4. அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் - பதிற்றுப்பத்து 62
  5. மன்மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க, பொருது இழி வார்மணல் (வையை) - பதிற்றுப்பத்து 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னியர்&oldid=1467656" இலிருந்து மீள்விக்கப்பட்டது